29 June 2018

கரையோரம்...



வாழ்க நலம்...


திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு  அடுத்து நாங்கள் படகில் செல்ல அனுமதி சீட்டு வாங்கியதால்...படகுத்துறைக்கு செல்ல ஆரம்பித்தோம்..



அங்கு தான் ஒரு ஆச்சிரியம்  காத்திருந்தது....









 அருவிக்கு செல்லும் நீர்...





அன்று அங்குள்ள அம்மன் கோவிலில் திருவிழா...அதனால்
உள்ளூர் மக்கள் நிறைய பேர் இருந்தனர்...

















 இதுதான் படகுத்துறை...இந்த பாலம் கடந்து செல்லவேண்டும்..




 பாலத்தின் கீழே..










இது ஆண்பாவம் படத்தில் வரும் இடம்...

எங்களுக்கு தெரியாமலே நாங்கள் அங்கு சென்றதால் அந்த இடத்தின் அழகை பார்த்து பிரம்பித்து போய் நின்றோம்...


இத்தகைய அழகை நாங்கள் எதிர்ப்பாக்கவே இல்லை..



அத்துனை அழகு...










அடுத்த பதிவில் படகுத்துறையை காணலாம்....


போன பதிவில் கீதாக்கா,துளசி அண்ணா சொன்னார்கள் நிறைய நீர் இருக்கும் என்று..

அதனால் கூகிள் பண்ணி பார்த்தேன்...

அட.. மழைக்காலத்தில் அங்கு அவ்வளவு தண்ணீர்..

அதில் இரு படங்கள் உங்களுக்கும்...













11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி



தொடரும்...




அன்புடன்
அனுபிரேம்...




7 comments:

  1. திற்பரப்பு அருவிக்கு செல்ல வேண்டும்...
    தங்கள் படங்கள் அத்தனையும் அழகு - நேரில் கண்டதைப் போல..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. அழகிய இடங்கள்... அழகிய படங்கள்..

    ReplyDelete
  3. ஆண்பாவம் படத்துல வரும் குயிலே குயிலே பூங்குயிலே.. பாடல் படமாக்கப்பட்ட இடம்.. கன்யாக்குமரி மொத்தமுமே பார்க்க பார்க்க சலியாது

    ReplyDelete
  4. அழகான படங்கள்.

    செய்திகள் அருமை.

    ReplyDelete
  5. அனு உங்க படங்கள் செம அழகு! நீங்க இதையே இப்படி பிரமித்துப் பார்த்திருக்கீங்கனா (எனக்கு கொஞ்சம் வேதனையாக இருந்துச்சு ) அப்ப பார்த்திருந்தீங்கனா எப்படி இருந்திருக்கும்...நினைச்சுப் பாருங்க!!! ஃபால்ஸ் விழும் இடத்தில் கரடு முரடாக தரை இருந்தது அப்புறம் சிமென்ட் எதுவும் இருக்காது முழுவதும் பாறைகளாகத்தான் இருக்கும். மேலிருந்து தண்ணீர் அப்படியே கொட்டும் இப்படி தண்ணீர் வர என்று மேலே வாய் போன்ற பாகங்கள் எதுவும் கட்டிர்யிருக்கவில்லை எல்லாமே நேச்சுரல். படகு எதுவும் விட்டதில்லை. எல்லோரும் அதில் குதித்து நீச்சலடித்துக் குளிப்பார்கள். பாலம் வழி நடந்து அந்தப் பக்கம் போய் மரங்களுக்ககிடைய்ல்தான் துணி மாற்றிக் கொள்வோம்..அந்த மதகு வழி அதாவது நடை பாலத்தின் அருகில் (நடைப்பாலமே அப்புறம்தான் வந்தது. ) அந்த தண்ணீர் இந்தப் பக்கம் வருதெ அந்த பாதைதான் இருந்தது அதன்வழி தண்ணீர் அதிகம் பாயும் சமயம் தவிர அதன் மேல் நடந்து மறுபக்கம் செல்வோம்....அல்லது அருவியின் அருகில் இப்படி எல்லாம் அப்போது கிடையாது தண்ணீர் ஓடும்...பாறைகளுமாகத்தான் இருக்கும். அந்த மண்டபத்தில் தூணில் துணி கட்டி உடை மாற்றிக் கொள்வோம். கூட்டமே இருக்காதே..!!!

    நாங்கள் இருந்த காலகட்டத்து ஃபோட்டோஸ் எல்லாம் கூகுளில் கிடைப்பது சிரமம்தான். அப்போது எல்லாம் சம்மர் சிவியராக இருந்தால் மட்டுமே தண்ணீர் குறைவாக இருக்கும் அது வெகு அபூர்வம். தண்ணீர் இவ்வளவு குறைவாகப் பார்த்ததில்லை அனு.

    என்றாலும் சுற்றுலா மையம் அதிகம் பேரை ஈர்க்க செய்துள்ளது தெரிகிறது. எனக்கு அப்போதைய திற்பரப்பு பிடித்திருந்தது...

    அருமையான படங்கள் அனு..ரொம்ப அழகா இருக்கும்..என்னதான் சொல்லுங்க எங்க ஊர் எங்க ஊர்தான் ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  6. மிக அழகிய படங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
  7. வா..வ் அழகான இடம். பார்க்கவே ரம்மியமா இருக்கு. படங்களும் அழகா எடுத்திருக்கிறீங்க.
    மேலே போட்டிருக்கும் படம் நீங்க வரைந்தது தானே. அழகா இருக்கு.

    ReplyDelete