15 September 2019

மேக காதலிகள்


வாழ்க வளமுடன் 




என்றும் எப்பொழுதும் மேகங்களைப் 

பார்ப்பதும் ரசிப்பதும் ....பிடிக்கும் 

அதுவும் கீழிருந்து நீல வானைப் பார்ப்பது

 என்றும் ...அழகு இனிமை 


தீடிரென்று  ஒரு நாள் 

அந்த மேக பொதிகளுக்கு நடுவே -நான் 

முதன் முறையாகச்  

சொல்ல இயலா பரவசம் ....


பலமுறை பயணம் செய்தவர்களுக்கு 

அது ஒரு அனுபவம் 

முதல் முறை அனுபவிப்பவர்களுக்கு

அது ஒரு ஆனந்த அனுபவம் ...


சிறு குழந்தை என உணரும் தருணம்

மகிழ்ச்சி ஆரவாரம் என 

உள்ளம் குதிக்கும் நேரம் 

வெண் பஞ்சு மேகங்களுக்கு நடுவே 

--------

தேவதை என நான் 😁😁😁😆








பஞ்சு பஞ்சாய்  ...



  

நீலம் , பச்சை , வெண்மை என 

























இந்த பயணம் லக்னோ  நோக்கி செல்லும் போது ...முதல் வான்பயணத்தில் நாங்கள் ரசித்த காட்சிகள் இன்று இங்கு  உங்கள் பார்வைக்கும் ....





அன்புடன்
அனுபிரேம்



6 comments:

  1. வணக்கம் சகோதரி

    முதல் வான்வெளி பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

    /பலமுறை பயணம் செய்தவர்களுக்கு

    அது ஒரு அனுபவம்

    முதல் முறை அனுபவிப்பவர்களுக்கு

    அது ஒரு ஆனந்த அனுபவம் .../

    உண்மைதான்.. முதல் முறை அந்த பயணம் புது அனுபவமாகத்தான் உள்ளது. நானும் என் இந்த புது வித அனுபவத்தை என் பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.

    படங்கள் அழகாக இருக்கிறது. பஞ்சுப் பொதியான மேகங்களுக்கிடையே பறக்கும் போது நம் மனமும் மகிழ்வால் பஞ்சாக மாறியது போல... பதிவு அருமை
    ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. படங்கள் அழகு. ஆஹா வட இந்தியப் பயணமா ? மகிழ்ச்சி.

    முதல் வான்வெளி பயணம் நல்ல அனுபவம் தான்.

    ReplyDelete
  3. விமான பயணங்கள் தொடர்ந்து அமையட்டும் சகோ.

    ReplyDelete
  4. அழகு, எத்தனை தடவைகள் பயணம் செய்தாலும், மேகத்துக்கு மேலே இருந்து மேகத்தைப் பார்த்து அலுக்கவே அலுக்காது.. அருமை.

    ReplyDelete
  5. முதல் விமான பயணம என்றுமே மறக்கமுடியாதது. பயம் கலந்த மகிழ்ச்சியான உணர்வாக இருந்தது என் முதல் அனுபவம். அழகான பயணமாக அமைந்திருக்கும் உங்களுக்கும். படங்கள் அழகு.

    ReplyDelete
  6. முதல் விமான பயணத்தில் ப்ஞ்சு பொதியாக மேகம், பர்க்க பார்க்க அலுக்காது.
    லக்னோ பயண அனுபவங்கள் இனி எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete