04 September 2019

பிள்ளையார் சிலைகள்


வாழ்க வளமுடன் 





இந்த சிலைகள் எல்லாம் போன வருடம் எங்கள் வீதியை அலங்கரித்தவை ...


எல்லாமே பார்க்க வெகு அழகு ..அதிலும் வண்ண வண்ண ஒளியால் ஒரே பிள்ளையார் பல வண்ணத்தில் மிளிர்கிறார் ..
































எங்கள் வீட்டில் பிள்ளையார் சிலை வாங்கும் பழக்கம் இல்லை. எப்பொழுதும்  மஞ்சள் விநாயகர் தான் ...இந்த வருடம் அந்த மஞ்சள் பிள்ளையாரும் அரிசி மாவு , மைதா சேர்த்து உருவம்  செய்து வழிபட்டோம் .





இங்குப் பிள்ளையார் கரைக்க ஏரிகளில் தனியாகக் கல்யாணி தீர்த்தம் என்னும் இடம் வைத்து இருப்பார்கள் . அங்கு தான் சிலைகளைக் கரைக்க வேண்டும் .

அங்கங்கு உள்ள வண்ண வண்ண சிலைகள் காணும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும் ... மூன்று நாள் சென்று கரைத்து விட்டு அனைவரும் சென்றுவிடுவார்கள் ...

அதன் பிறகு அந்த கல்யாணி தீர்த்தக் காணும் போது எல்லாம் வருத்தமாக இருக்கும் ..அந்த இடம் கொள்ளாத அளவு பிள்ளையார் சிலைகள் ..அனைத்தையும் கரைக்க இயலாமல் பாதி கரைந்த நிலையில் விநாயகர் சிலைகள்  ...கை , கால் எனத் தனியாகப் பார்க்கும் போது மிகக் கஷ்டமாக இருக்கும் ...


இச்சிலைகளின் மூலம் பலரின் வாழ்வாதாரம்  நடைபெறுகிறது என்பது மகிழ்ச்சி என்றாலும் ...இப்படிப் பாதி , கால் எனக் கரைந்த நிலையில் பல நாள் கேட்பாரற்று கிடக்கும் சிலைகளைக் காணும் போது வரும் மன வருத்தத்தைத் தவிர்க்க இயலவில்லை .


அன்புடன்
அனுபிரேம்



6 comments:

  1. பிள்ளையார் சிலை படங்கள் அழகு. அரை குறையாக கரைத்த சிலைகள் சோகம்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    தங்கள் வீதியை அலங்கரித்த பிள்ளையார் சிலைகள் மிகவும் அழகாக இருக்கின்றன இப்படித்தான் நாங்கள் இருக்கும் இடத்திலும் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்து சற்று அருகிலிருக்கும் நீர் நிலையில் கரைப்பார்கள். அழகழகான பிள்ளையார்கள் பாதி கரைந்ததும் மிகுதி கரையாமலும் இருப்பதை பார்க்கும் போது மனதுக்கு கஸ்டமாக இருக்கும். இப்போது சிலைகளை அங்கு கரைப்பதற்கு தடை வந்து விட்டது. இதைப்பற்றி ஒரு கவிதையாக எழுதி வைத்திருந்தேன். இன்னமும் வெளியிடவில்லை. தங்கள் பதிவை பார்த்ததும் அது நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. எத்தனை அழகான பிள்ளையார்கள். இப்படி ரோட்டோரத்தில் அலங்கரித்து வைத்திருப்பார்களோ..

    //அனைத்தையும் கரைக்க இயலாமல் பாதி கரைந்த நிலையில் விநாயகர் சிலைகள் ...கை , கால் எனத் தனியாகப் பார்க்கும் போது மிகக் கஷ்டமாக இருக்கும் ...///
    ஓ இதைவிட கரைக்காமல் வீட்டிலேயே வைத்திருக்கலாம், மெதுவா அடுத்த மாத சதுர்த்தியில் கரைக்கலாமோ..

    ReplyDelete
  4. அழகான பிள்ளையார் சிலைகள். தடைபோட்டுமா கரைக்கிறார்கள். மஞ்சள் விநாயகரும்,எலியும் அழகா இருக்கு.

    ReplyDelete
  5. கண்கவரும் கணபதி தரிசனம்...

    அழகான படங்கள்...

    நீங்கள் சொல்வது போல அத்தனை சிலைகளையும் தண்னீரில் கரைக்கிறேன் என்று அலட்சியமாப் போட்டு விட்டுப் போவது மிகுந்த வேதனையைத் தருகின்றது..

    இதைப் பற்றி நல்லோர் பலரும் சொல்லி விட்டார்கள்...

    இந்த விசர்ஜனத்தை நடத்துபவர்கள் காதில் கேட்டுக் கொள்வதில்லை...
    பெரும் பாவத்தைச் சேந்த்துக் கொள்கின்றார்கள்... அவ்வளவுதான்...

    ReplyDelete