13 August 2020

யானை பெரிய யானை....

வாழ்க வளமுடன் 

நேற்று ஆகஸ்ட் 12 உலக யானைகள் தினம் ......



யானை பெரிய யானை

யார்க்கும் அஞ்சா யானை


பானை வயிற்று யானை


பல்லைக் காட்டா யானை


முறத்தைப் போல காது


முன்னால் வீசும் யானை


சிறிய கோலி குண்டாம்


சின்ன கண்கள் யானை


முன்னங்காலை மடக்கி


முட்டி போட்டு படுக்கும்


சின்ன குழந்தை ஏற்றி


சிங்காரமாய் நடக்கும்






யானைகள் நீர்நிலைகளைக் கண்டால்  ஓடிச்சென்று, உடல் முழுவதும் நனைய ஆட்டம் போடுபவை. நீரில் மூழ்கியும், தண்ணீரை உடலின் மீது பீய்ச்சி அடித்தும் குதூகலத்துடன் விளையாடுபவை.

யானைகளுக்கு ஆழமான நீர்நிலைகளிலும், ஆறுகளிலும் எளிதாக மிதக்கத் தெரியும்.

 யானையின் மிகப்பெரிய உடலே அது எளிதில் மிதப்பதற்கு உதவுகிறது. 

நீந்தும் போது யானை, தனது பெரிய நுரையீரல்களால் மிதக்கும் திறனை பெறுகிறது. தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டி காற்றை சுவாசிக்கிறது. 

யானை தனது பெரிய உடலைத்  தாங்க கால்களை எப்போதும் பயன்படுத்தும். 

மிதப்பதால் யானை தனது கால்களுக்கும், மூட்டுகளுக்கும் ஓய்வைத் தருகிறது. 












யானையின் சருமம் மிகுந்த உணர்திறன் கொண்டது. யானையின் தோல் தடிமனாக இருந்தாலும், தன் மீது ஒரு சிறு ஈ அமர்வதைக் கூட உணர்ந்து கொள்ளும். 


பாலூட்டி வகைகளிலேயே மிக அதிக கர்ப்ப காலம் கொண்டது யானை மட்டும் தான்.

 22 மாதங்கள் குட்டியை சுமக்கிறது. 

மிக மிக அரிதாக எப்போதாவது இரண்டு குட்டிகளை ஈனும். 

யானைகளின் சராசரியாக  60 வயது வரை வாழ்பவை என்ற போதும், பெண் யானை 50 வயது வரை கர்ப்பம் தரித்து குட்டியை ஈனும்.









புதிதாக பிறந்த யானைக்குட்டிக்கு கண் பார்வை தெரியாது.

 யானைக் குட்டி பிறக்கும் போது அதிகபட்சமாக 115 கிலோ எடை இருக்கும்.

 ஆனால், இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட பிறந்த சிறிது நேரத்திலேயே யானைக்குட்டியால் எழுந்து நிற்க முடியும்.

காட்டில் இருக்கும் பிற வேட்டை விலங்குகளான சிங்கம், புலி ஆகியவற்றிடம் இருந்து தப்பிக்க உடனடியாக எழுந்து நிற்பதும், நடப்பதும் அவசியம். 

யானைகளின் மரபணுவிலேயே பரிணாம வளர்ச்சியால் உருவான எச்சரிக்கை குணத்தால் விரைவில் எழுந்து நிற்பது சாத்தியம் ஆனது. 






யானையின்  துதிக்கையில் சுமார்   40,000க்கும் மேற்பட்ட  தசை அடுக்குகள் உள்ளன. 

யானை தனது, துதிக்கையை பயன்படுத்தி ஒரு பொருளின் அளவு, வடிவம் மற்றும் வெப்பநிலையை உணரக் கூடியது. 

 துதிக்கையை நிலத்தில் ஊன்றி சுற்றுப்புற அதிர்வுகளையும் கேட்கும்.











யானைகள் குடும்பமாக வாழும் சமூக விலங்குகள்.

யானைகள், வயது முதிர்ந்த  யானையின் தலைமையில் கூட்டமாக வாழக்கூடியவை.

 ஒரு யானைக்குட்டி புகார் செய்தால், கூட்டத்தில் இருக்கும் அனைத்து யானைகளும், முழு அரவணைப்போடு அதைத் தொட்டு ஆறுதல் அளிக்கும். 

யானைகள் மகிழ்ச்சி, சோகம், இரக்கம், எச்சரிக்கை உணர்வு  ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. 







ஆனை ஆனை

அழகர் ஆனை


அழகரும் சொக்கரும்

ஏறும் ஆனை


கட்டிக்கரும்பை

முறிக்கும் ஆனை


காவேரி தண்ணீரை

கலக்கும் ஆனை


குட்டி ஆனைக்குக்

கொம்பு முளைச்சுதாம்


பட்டணமெல்லாம்

பறந்தோடிப் போச்சுதாம்!



அன்புடன் ,

அனுபிரேம் 






 

7 comments:

  1. ஆனையைப் பற்றி அழகான படங்களுடன் இனிய பதிவு...

    யானையைக் கண்டு மயங்காதவரும் உண்டோ!..

    ReplyDelete
  2. யானைகள் பற்றிய தகவல்களும், படங்களும்...

    எப்ப்பவுமே ரொம்ப சுவாரஸ்யம்.

    ReplyDelete
  3. முதல் படத்தில் யானை ஹையோ என்ன பெரிசா இருக்கு.

    தகவல்கள் படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது அனு.

    கீதா

    ReplyDelete
  4. யானை நினைப்பு வந்ததும் சிறுவர் பாடல்களும் நினைவுக்கு வந்துவிட்டன போலிருக்கிறது. அதன் தந்தமும் பல் இல்லையோ?

    படங்களும் தகவல்களும் சிறப்பு.

    யானைக்கூட்டத்தைத் தலைமை தாங்குவது வயதில் மூத்த பெண் யானை என்பது வியப்புக்குரியது.

    ReplyDelete
  5. யானை என்றைக்கும் ஸ்வாரஸ்யம். சிறப்பான தகவல்கள். அழகான படங்களுடன் நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. யானை பாடல், யானையின் படங்கள் யானையைப்பற்றி விவரங்கள் என்று பதிவு மிகவும் அருமை.

    ReplyDelete