29 August 2020

வாமன ஜெயந்தி....

 இன்று வாமன ஜெயந்தி...

ஆவணி , சுக்கில பட்ச துவாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில்,  பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த அவதாரம் -வாமன அவதாரம்.



குள்ளமான பிராமண சிறுவனின் வடிவில் தோன்றிய பகவான் வாமனருக்கு, 

பிரஹஸ்பதி பூணூல் அணிவித்தார், 

பூமாதேவி மான்தோல் வழங்கினார் , 

கஷ்யபர் தர்ப்பைப் புல்லை அணிவித்தார், 

சந்திரன் பிரம்ம தண்டத்தை வழங்கினார், 

அதிதிதேவி ஆடைகளை வழங்கினார் , 

சூரியன் காயத்ரி மந்திரத்தைக் கொடுத்தார், 

இந்திரன் குடை கொடுத்தார், 

பிரம்மா கமண்டலம் கொடுத்தார், 

சரஸ்வதி ருத்திராக்ஷ மாலையைக் கொடுத்தார் , 

குபேரன் பிச்சை பாத்திரத்தைக் கொடுக்க, பார்வதி அதில் முதலாவதாக பிச்சைப் போட்டார் . 


 



மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில் *
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய *
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய *
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ. 

7 103




வருக வருக வருக இங்கே 
வாமன நம்பீ! வருக இங்கே *
கரியகுழல் செய்யவாய் முகத்துக் 
காகுத்தநம்பீ! வருக இங்கே * 
அரியனிவன் எனக்கு இன்று நங்காய்! 
அஞ்சனவண்ணா! அசலகத்தார் *
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் 
பாவியேனுக்கு இங்கே போதராயே. 

2 203



மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று * 
மூவடி தாவென்று இரந்த இம்மண்ணினை *
ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே *
தாவடியிட்டானால் இன்று முற்றும் 
தரணியளந்தானால் இன்று முற்றும்.

7 219










ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி *
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் *
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து *
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகள *
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப * 
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை பற்றி 
வாங்க * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் *
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2)

3 476



அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி *
சென்றங்குத்  தென்லிங்கைசெற்றாய்! திறல்போற்றி *
பொன்றச் சகடமுதைத்தாய்! புகழ்போற்றி *
கன்றுகுணிலா எறிந்தாய்! கழல்போற்றி *
குன்று குடையாவெடுத்தாய்! குணம்போற்றி *
வென்றுபகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி *
என்றென்றுன் சேவகமே ஏத்திப்பறைகொள்வான் *
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய். (2)

24 497











அன்றுலகம்மளந்தானையுகந்து
அடிமைக்கண் அவன்வலிசெய்ய *
தென்றலுந்திங்களுமூடறுத் தென்னை
நலியும் முறைமையறியேன் *
என்றுமிக்காவிலிருந்திருந்து
என்னைத் ததர்த்தாதே நீயும் குயிலே *
இன்று நாராயணனை வரக்கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்.

10 554



நின்றுநிலமங்கை நீரேற்றுமூவடியால் * 
சென்றுதிசையளந்த செங்கண்மாற்கு * - என்றும் 
படையாழிபுள்ளூர்த்தி பாம்பணையான்பாதம் * 
அடையாழிநெஞ்சே! அறி. 

21 2102




நீயன்றுலகளந்தாய் நீண்டதிருமாலே! * 
நீயன்றுலகிடந்தாயென்பரால் * நீயன்று 
காரோதம்முன்கடைந்து பின்னடைத்தாய்மா கடலை * 
பேரோதமேனிப்பிரான்! 

30 2211



வாய்மொழிந்துவாமனனாய் மாவலிபால் * மூவடிமண் 
நீயளந்து கொண்ட நெடுமாலே? * - தாவியநின் 
எஞ்சாவிணையடிக்கே ஏழ்பிறப்புமாளாகி * 
அஞ்சாதிருக்கவருள். 

18 2299











மதுசூதனையன்றிமற்றிலேனென்று எத்தாலும் கருமமின்றி * 
துதிசூழ்ந்தபாடல்கள்பாடியாட நின்றூழியூழிதொறும் * 
எதிர்சூழல்புக்கெனைத் தோர்பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய * 
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.

6 2856



திரிவிக்கிரமன்செந்தாமரைக்கண் எம்மானென் செங்கனிவாய் *
உருவிற்பொலிந்தவெள்ளைப்பளிங்கு நிறத்தனனென் றென்று * உள்ளிப் 
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே * 
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென் வாமனனே!

7 2857



வாமனன்! என்மரதகவண்ணன்! தாமரைக்கண்ணினன்! 
காமனைப்பயந்தாய்! * என்றென்று உன்கழல்பாடியே பணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க * என்னைத் 
தீமனங்கெடுத்தாய் உனக்கென்செய்கேன்? என்சிரீதரனே!

8 2858


திருக்கோவிலூர் ஸ்ரீவாமனர் 







ஓம் நமோ நாராயணாய நமக !!

பெருமான் திருவடிகளே சரணம் ..



அன்புடன்
அனுபிரேம்...

2 comments:

  1. பிரபந்த பாடல்கள், படங்கள் எல்லாம் மிக அருமை.
    ஓங்கி உலகளந்த பெருமாள் தரிசனம் செய்தேன்.

    ReplyDelete
  2. வாமன ஜெயந்தி... தகவல்கள் சிறப்பு.

    சிற்பமாக இருக்கும் படம் ரொம்பவே அழகு. எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு.

    ReplyDelete