24 October 2020

பொய்கையாழ்வார் ...

 இன்று  பொய்கையாழ்வார் திருநட்சித்திரம். .....


ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்   அவதரித்தவர் இவர்.....
பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே

வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே

வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே

வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே

வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே......  !


பொய்கையாழ்வார்  


பிறந்த ஊர்         - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,

பிறந்த ஆண்டு - 7ம்நூற்றாண்டு

நட்சத்திரம்       -  ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை             - செவ்வாய்

எழுதிய நூல்    -  முதல் திருவந்தாதி

பாடல்கள்        - 100

சிறப்பு              - திருமாலின் சங்கின் அம்சம்
முதல்திருவந்தாதி 

பழுதேபலபகலும் போயினவென்று * அஞ்சி 
அழுதேன் அரவணைமேல்கண்டு - தொழுதேன் * 
கடலோதம்காலலைப்பக் கண்வளரும் * செங்கண் 
அடலோதவண்ணரடி. 

16 2097


அடியும் படிகடப்பத் தோள்திசைமேல்செல்ல * 
முடியும்விசும்பளந்ததென்பர் * - வடியுகிரால் 
ஈர்ந்தான் இரணியனதாகம் * இருஞ்சிறைப்புள் 
ஊர்ந்தான் உலகளந்தநான்று. 

17 2098


நான்றமுலைத்தலை நஞ்சுண்டு * உறிவெண்ணெய் 
தோன்றவுண்டான் வென்றிசூழ்களிற்றை - ஊன்றி * 
பொருதுடைவுகண்டானும் புள்ளின்வாய்கீண்டானும் * 
மருதிடைபோய்மண்ணளந்தமால். 

18 2099


மாலுங்கருங்கடலே! என்நோற்றாய்? * வையகமுண்டு
ஆலினிலைத்துயின்றவாழியான் * - கோலக்
கருமேனிச் செங்கண்மால்கண்படையுள் * என்றும்
திருமேனி நீதீண்டப்பெற்று.

19 2100


பெற்றார்தளைகழலப் பேர்ந்தோர்குறளுருவாய் * 
செற்றார்படிகடந்தசெங்கண்மால் * - நற்றா 
மரைமலர்ச்சேவடியை வானவர்கைகூப்பி * 
நிரைமலர்கொண்டுஏத்துவரால்நின்று.

20 2101நின்றுநிலமங்கை நீரேற்றுமூவடியால் * 
சென்றுதிசையளந்தசெங்கண்மாற்கு * - என்றும் 
படையாழிபுள்ளூர்த்தி பாம்பணையான்பாதம் * 
அடையாழிநெஞ்சே! அறி. 

21 2102


அறியுமுலகெல்லாம் யானேயுமல்லேன் * 
பொறிகொள்சிறையுவணமூர்ந்தாய் * - வெறிகமழும் 
காம்பேய்மென்தோளி கடைவெண்ணெயுண்டாயை * 
தாம்பேகொண்டார்த்ததழும்பு. 

22 2103


தழும்பிருந்தசார்ங்கநாண் தோய்ந்தவாமங்கை * 
தழும்பிருந்த தாள்சகடம்சாடி * - தழும்பிருந்த 
பூங்கோதையாள்வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த * 
வீங்கோதவண்ணர்விரல்.

23 2104


விரலொடுவாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு * ஆய்ச்சி 
உரலோடுஉறப்பிணித்தநான்று * - குரலோவாது 
ஏங்கிநினைந்து அயலார்காணவிருந்திலையே? * 
ஓங்கோதவண்ணா! உரை. 

24 2105


உரைமேற்கொண்டு என்னுள்ளமோவாது * எப்போதும் 
வரைமேல் மரதகமேபோல * - திரைமேல் 
கிடந்தானைக் கீண்டானை * கேழலாய்ப்பூமி 
யிடந்தானை யேத்தியெழும். 

25 2106முந்தைய பதிவுகள் ..

பொய்கையாழ்வார் வைபவம்   

 பொய்கையாழ்வார் 

பொய்கையாழ்வார் - 2019

பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..

அன்புடன்

அனுபிரேம்...

1 comment:

  1. பொய்கை ஆழ்வார் திருநட்சத்திரத்தின் பதிவு சிறப்பு. படங்களும் அருமை

    ReplyDelete