20 October 2020

கன்னிமரா தேக்கு

 வாழ்க வளமுடன் ,


இந்த பகுதியில்  மலைவாழ்மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இங்கு  நான்கு வகையான மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள். முதுவர், மலை மலசர் (malai malasar), மலைசர் (Malasar) மற்றும் காடர் போன்றோர் பல தொகுப்புகளாக வாழ்கிறார்கள். இங்கு வன மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களைக் கொண்டே மலை ஏற்றத்திற்கு வழிகாட்டிகளாகவும், யானை சவாரிக்கு உதவுபவர்களாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டு வேலையும் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவி செய்கின்றன.


முந்தைய பதிவுகள் 

1.   டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி

3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்

4.டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்

5.மேலே உயரே உச்சியில்...



பரம்பிக்குளம் அணையை கண்ட உடன்  அடுத்து நாங்கள் பார்த்தது ...

 உலகத்திலேயே மிகப்பெரிய தேக்கு மரம் என்ற புகழுடன் அறியப்படும் இந்த ‘கன்னிமரம்’ எனப்படும் தேக்கு மரம். நீலம்பூரின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.



பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மரத்தின் அடிப்பாகம் 6.48மீ சுற்றளவைக் கொண்டுள்ளது. 400 வருடங்கள் வயதுடையதாக கருதப்படும் இந்த மரம் நுனி வரை 48.75 மீட்டர் உயரத்துடன் காட்சியளிக்கிறது. அதாவது, ஏறக்குறைய 160 அடி உயரம்.







 இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் ஒரு முக்கியமான ஆன்மீக அடையாளமாகவே கருதப்படும் இந்த தொன்மையான மரத்தை சுற்றி பல கதைகள் விளங்கி வருகின்றன. அவற்றில் ஒன்று - இந்த மரத்தை வெட்ட முனைந்தபோது இதிலிருந்து ரத்தம் வந்தது என்பதாகும். அதன் பின் இந்த மரத்தை உள்ளூர் மக்கள் ‘கன்னி மரம்’ என்றே அழைக்க ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. 





 இந்திய அரசாங்கம் இந்த மரத்திற்கு ‘மஹாவிருக்ஷ புரஸ்கார்’ எனும் விருதினை அளித்துள்ளது.





ஒரே நேரத்தில் ஏழு பேர் கை  கோர்த்து சுற்றி நின்றால்  தான் இந்த மரத்தை முழுவதுமாக சுற்ற முடியும் என உடன் வந்தவர் கூற, நாங்களும் ஏழு பேர் சேர்ந்து கை  கோர்த்து சுற்றி நின்று ரசித்தோம்.


இங்கு செல்லும் வழி  சிறிது கடினமாகவே இருந்தது , ஆனாலும்  இந்த மரத்தை காணும் பொழுது மற்றவை மறந்து போகின்றன .


அங்கிருந்து மீண்டும் வேறு வழியாக பரம்பிக்குளம் அணையை கடந்து சென்று , எங்களின்  காட்டு  வழி  சவாரியை நிறைவு செய்தோம் .







இங்கு சவாரியை முடித்தவுடன் மீண்டும் டாப்ஸ்லிப்  சென்றோம் ...

அங்கு இருப்பது ஒரே ஒரு உணவகம் , அங்கு நமக்கு தேவையான எளிய உணவை  கூறினால் சிறிது நேரத்தில் சுட சுட செய்து தருகிறார்கள். சுவையும் நன்றாகவே இருந்தது , விலையும் அதிகம் இல்லை. அங்கு  உண்டு முடித்து எங்கள்  அறைக்கு வந்து சேர்ந்தோம்.



தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 






3 comments:

  1. மிக அழகிய, அருமையான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைச்சிருக்குது அனு..

    ReplyDelete
  2. அழகான இடம். உங்கள் மூலம் இந்த இடங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete