06 October 2020

பரம்பிக்குளம் அணை......

  வாழ்க வளமுடன் ,


பரப்பிக்குளப் பகுதியான இப்பகுதி உயிரியற் பல்வகைமை மையமாக விளங்குவதால் பாலூட்டிகள் சோலைமந்திகள், நீலகிரி வரையாடுகள், இந்திய யானைகள், வங்காளப் புலிகள், இந்தியச் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், கடமான்கள், குல்லாய் குரங்குகள் , நீலகிரி மந்திகள், தேன் கரடிகள், நீலகிரி மார்ட்டின்கள், திருவாங்கூர் பறக்கும் அணில்கள் மற்றும் கடமா என 39 வகையும், நீர்நில வாழ்வன 16 வகைகளும், சிறுத்த பெருநாரை, சாம்பல் தலை மீன்பிடிக் கழுகு, பொன்முதுகு மரங்கொத்தி, பாம்புத் தாரா, சின்ன நீர்க்காகம்,மலை இருவாட்சி, செம்மீசைச் சின்னான், கரும்பருந்து , சிறிய மீன் கழுகு, அதீனா மீன் கழுகு, கிழக்கத்திய விரிகுடா ஆந்தை, கறுவாக் காடை, கருப்பு மரங்கொத்தி, மற்றும் கருப்புத்தலை மீன்கொத்தி என 268 வகை பறவைகள் காணப்படுகின்றன. 

மேலும் ஊர்வன, கருநாகம், கேரளா வாலாட்டி பாம்புகள், திருவாங்கூர் குக்குரி பாம்பு, திருவாங்கூர் ஓநாய் பாம்பு, கொச்சி பிரம்பு ஆமை, கல் ஆமை, இந்திய கரட்டைப் பல்லி, மேற்குத் தொடர்சி மலைப் பறக்கும் பல்லியோந்திகள் என 61 வகைகளும், மீன்கள் 47 வகைகளும், பூச்சிகள் 1049 வகைகளும், மற்றும் பட்டாம்பூச்சிகள் 124 வகைகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே இப்பகுதி பாரம்பரிய காட்டெருமை வாழும் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


முந்தைய பதிவுகள் 

1.   டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி

3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்

4.டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்

5.மேலே உயரே உச்சியில்...

முந்தைய பதிவில் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் சென்று அங்கிருந்த வாகனத்தில் எங்களின்  சவாரியை ஆரம்பித்தோம் என்று கூறினேன் ...


இன்று அங்கு என்ன பார்த்தோம் என காணலாம் ....


வாகனத்தில் செல்லும் போது  வழியில் பல வகை மான்கள், காட்டெருமைகள் கண்டோம் , அங்கெல்லாம்  சிறிது  நேரம் வாகனத்தை நிறுத்தி எளிதாக காண செய்தார்கள்.



மான் கூட்டம் 






அடுத்து நாங்கள்  பார்த்த இடம் பரம்பிக்குளம் அணை.... ஓரளவு  நீர் நிரம்பி  மிக பசுமையாக இருந்தது. இங்கு இறங்கி  நின்று சிறிது நேரம் இயற்கையை ரசித்தோம்  ....


















பரம்பிக்குளம் அணை   காமராசர் தமிழக முதல்வராக இருந்த  காலத்தில் கட்டப்பட்டது. 

பரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது. 
















அங்கிருந்த ஒரு உணவகம் ..






வழியில் அழகிய இயற்கை வளங்களை ரசித்துக் கொண்டே எங்கள்  பயணம் தொடர்ந்தது ... இடையில் மீண்டும் ஒரு முறை தேனீர் பருகவென, வேனை  நிறுத்தினார்கள் ...

அங்கிருந்து நாங்கள் அடுத்து சென்றது மிக அழகான இடம் ....அது அடுத்த பதிவில் ..








தொடரும் ...

அன்புடன் 

அனுபிரேம் 




1 comment:

  1. அழகான படங்கள்.

    தகவல்களும் நன்று. தொடரட்டும் பயணங்கள் - தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete