01 October 2020

பேட் துவாரகை

   வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள் 

 பஞ்சதுவாரகா தரிசனம் ...

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில்

ஸ்ரீ துவாரகாதீசர் கோயில் அடுத்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் பேட் துவாரகா என்று ஒரு தலம் உள்ளது. வடமொழியில் பேட் என்றால் தீவு என்று பொருள்.  அதாவது, தீவாக விளங்கும் துவாரகை.

கோமதி துவாரகையில் இருந்து ஓகா துறைமுகம் வரை தரைவழியே சென்று, அங்கிருந்து படகில் சுமார் 35 நிமிடங்கள் பயணிக்க, பேட் துவாரகையை அடையலாம்!







துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. படகில்தான் அங்கு செல்ல வேண்டும். முதலில் ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் இது. 

இங்கே அவரது அரண்மனை அப்படியே உள்ளது.







 கடலுக்கு நடுவில், ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் உள்ளது. முதலில், ப்ரத்யும் சந்நிதி; நடுவில் கண்ணனின் ஆலயம். தேவகி, மாதவன் ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. நரகாசுரனிடம் இருந்து 16,000 பெண்களை மீட்டு, அவர்களுடன் ஸ்ரீகண்ணன் வாழ்ந்தது இங்குதான்!





தீவு துவாரகையில், கிருஷ்ணன், துவாரகநாத்ஜீ என்ற பெயரில் மூலவராக தரிசனம் தருகிறார். இவருக்கு எதிரில் கிருஷ்ணரின் தாயார் தேவகிக்கு தனிச் சந்நதி  உள்ளது. 

வேறெந்த வைணவத் தலத்திலும் கிருஷ்ணனின் தாயார் இப்படி சிறப்பு செய்யப்படவில்லை என்கிறார்கள். இதே கோயிலில் ஸ்ரீகிருஷ்ணனின் எட்டு  மனைவியருக்குமான தனித்தனி சந்நதிகளையும் தரிசிக்கலாம். இந்த சந்நதித் தொகுதியை கிருஷ்ணரின் ‘அந்தப்புரம்’ என்று சொல்கிறார்கள். கல்யாண ராயர்,  கிருஷ்ணன், திருவிக்ரமன், லக்ஷ்மி நாராயணர் ஆகியோருக்கும் சந்நதிகள் உள்ளன.


(இங்கும் படம் எடுக்க அனுமதி இல்லை..எனவே படகு பயணத்தில் எடுத்த காட்சிகள் .)



2452

சேயனணியன் சிறியன்மிகப்பெரியன் * 

ஆயன் துவரைக்கோனாய்நின்ற - மாயன் *அன்று 

ஓதிய வாக்கதனைக்கல்லார் * உலகத்தில் 

ஏதிலராம் மெய்ஞ்ஞானமில். 


நான்முகன் திருவந்தாதி  - 71





தொடரும் ......

கண்ணன் திருவடிகளே சரணம் ....

அன்புடன் 

அனுபிரேம்     

1 comment:

  1. பேட் துவாரகா - சிறப்பான இடம். இரண்டு முறை இந்தக் கோவிலுக்குச் சென்று வந்திருக்கிறேன். படங்கள் நன்று.

    ReplyDelete