19 November 2020

கந்த சஷ்டி விரதம்...

 



அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி

அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்

இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே

இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்

மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே

வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே

சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே

திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.






கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். 

கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்ட ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய!



சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். 

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து, அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.



கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.




பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா

கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா

நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்

கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா!



 மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது.

 தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அஸ்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது. 

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் .....









கொத்துமலர்.... இதழ்விரிப்பு

குமரனவன்.... புன்சிரிப்பு

சித்தமதும்.... மயங்கிடுதே

சிறகின்றிப்....பறந்திடுதே...(கொத்து...)

பச்சைமயில் மீதினிலே

பறந்துவரும் அழகினிலே

இச்சைகளும் மறந்திடுதே

இன்பமனம் விரிந்திடுதே....(கொத்து...)

தேர்மீது பவனிவரும்

தென்னவனுன் சிரிப்பினையே

ஊர்பேசித் திரிந்திடுதே

உறங்காமல் மகிழ்ந்திடுதே....(கொத்து...)

கார்மேகம் குளிர்ந்திடுதே

கனமழையும் பொழிந்திடுதே

நீரோடும் பாதையெங்கும்

நின்றாடும் உனதழகே....(கொத்து...)

பாரெங்கும் மழைகொடுத்துப்

பசுமைகளைச் செய்தவனே

ஊரெங்கும் நலம்செய்வாய்

உலகாளும் நாயகனே....(கொத்து...)

மனமென்ற வாகனத்தில்

மகிழ்ந்தாடும் மன்னவனே

நினைவுகளை வளம்செய்வாய்

நினதடிகள் போற்றுகிறோம்....(கொத்து...)





அருள் முகமாம் முருகனின் அருள் மழை 

அனைவருக்கும்  பரிபூரணமாக கிடைக்கட்டும்....

முருகா சரணம் !
கந்தா சரணம் !


அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. நன்னாளில் அருமையான பதிவு.

    ReplyDelete
  2. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். நிறைய விளக்கங்களை தந்திருக்கும் அருமையான பதிவு. கந்தனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். கந்தா சரணம். கடம்பா சரணம் கார்த்திகேயா சரணம். வேலவா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete