26 March 2021

உறையூர் கமலவல்லி தாயார் சேர்த்தி வைபவம்...


ஆதிபிரம்மோத்ஸவம் பங்குனி திருவிழாவில் - ஆறாம் நாள் அதிகாலை உறையூர் புறப்பாடு...






  


உறையூர் கமலவல்லி தாயார் சேர்த்தி வைபவம் - 


ஆதிபிரம்மோத்ஸவம் பங்குனி திருவிழாவில் - ஆறாம் நாள் உறையூர் கமலவல்லி தாயார் சேர்த்தி வைபவம்....

 கமலவல்லி நாச்சியார் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம், அன்றே இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.







நம்பெருமாள் மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார்.

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக்கொள்வார்.

பின்னர் இருவரும் திருமணக் கோலத்தில் "சேர்த்தி சேவை" சாதிப்பார்கள்.










1762


கோழியும்கூடலும்கோயில்கொண்ட 
கோவலரேஒப்பர், குன்றமன்ன *
பாழியந்தோளும் ஓர்நான்குடையர் 
பண்டு இவர்தம்மையும்கண்டறியோம் *
வாழியரோஇவர்வண்ணம்எண்ணில் 
மாகடல்போன்றுளர், கையில்வெய்ய *
ஆழியொன்றேந்திஓர்சங்குபற்றி 
அச்சோஒருவரழகியவா! 





முக நூலில் இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

பெருமாள் திருவடிகளே சரணம் !!

தாயார்  திருவடிகளே சரணம் !!

ஓம் நமோ நாராயணாய நமக 

அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன. (லேபல் - திவ்யப் என்று வரணும், திவிய என்று வந்திருக்கிறது)

    ReplyDelete
  2. சிறுவயதில் கண்டு ரசித்திருக்கிறோம். 

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உறையூர் கமலவல்லி தாயார் சேர்த்தி உற்சவம் பற்றி தெரிந்து கொண்டேன். எம்பெருமாள், உடனுறை கமலவல்லி தாயார் படங்கள் மிகவும் அழகாக உள்ளது. பக்தியுடன் தரிசித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. சேர்த்தி படங்கள் நேர்த்தி!

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete