14 March 2021

18.மழை தருமோ என் மேகம்…

வாழ்க வளமுடன் ...





படம்: மனிதரில் இத்தனை நிறங்களா

இசை: சியாம்

பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா


 மழை தருமோ என் மேகம்…

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…

தோகைக்கு தூதுவன் யாரோ… தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன… பொன்வண்டே….

(மழை தருமோ)











தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது…

தேனீயில் ஒன்று இங்கு போராடுது… (தேனிருக்கும்)

அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…

தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா…

(மழை தருமோ)


ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…









கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…

காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்..

சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ…

சிலை வண்ணம் அங்கே… கலை உள்ளம் இங்கே..

நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே…

பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா…

(மழை தருமோ)


ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…






அன்புடன்
அனுபிரேம்




4 comments:

  1. படங்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete
  2. அருமையான பாடல். பாடலுக்கேற்ற அழகான மழை மேக படங்கள். அழகாக எடுத்துள்ளீர்கள்.. எனக்கும் இந்த மாதிரி மழை மேக படங்களை காமிராவில் சிறைபிடிக்கவும், ரசிக்கவும் மிகவும் பிடிக்கும். தாங்கள் தந்துள்ள படங்களை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் அழகு.
    பசுமை கண்ணுக்கு விருந்து.
    பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete