28 March 2021

பங்குனி உத்திரம்- நம்பெருமாள்,ஶ்ரீரங்கநாயகித் தாயார் சேர்த்தி..

 ஸ்ரீ ரங்கநாயகித் தாயாரும்  நம்பெருமாளும் சேர்த்தி சேவை...





பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே !

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே !

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே !

மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே !

எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே !

இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே !

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே !

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே !





திருவரங்க திவ்ய தம்பதிகளான தாயாரும் நம்பெருமாளும் வருடத்திற்கு ஒரு முறை சேர்த்தி கண்டருளுவது பங்குனி உத்திர திருநாள். 

ஆதிசேஷனின் புனராவதாரமான ராமாநுஜர், ஜீவாத்மாக்களைத் திருத்தி, மோக்ஷம் அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவதரித்தார். ஆகவே, அத்திருநாளில் ஓர் உசிதமான கார்யத்தைச் செய்தார். 

ராமாநுஜர் முதலில் தாயாரிடம் பிரார்த்தித்து நின்றார். தாயாரும் கடாக்ஷம் செய்து புருஷகாரம் செய்தருளினாள். பின் நம்பெருமாளிடம் அற்புதமாக கத்யத்ரயங்கள் பாடி, சரணாகதி செய்தார்.

அதனால் மிக உகந்த நம்பெருமாள், "குழந்தாய்..! உமக்கில்லாத மோக்ஷமா? அவ்வாறே தந்தோம்" என்றார். 

ராமாநுஜர் பேசினார், "ஸ்வாமி, அடியேனுக்காக மட்டும் மோக்ஷம் கேட்கவில்லை, எம்முடைய சம்பந்தம் உள்ள அடியார்கள் அனைவருக்காகவும் மோக்ஷத்தை கேட்கிறோம்" என்றார்.

ராமாநுஜர் தம்முடைய அவதார கிரமத்திற்குச் சேர இவ்வாறு கேட்கிறார் என்பதை அறியாதவர் அல்ல நம்பெருமாள், ஆகவே, "அவ்வாறே உம்முடைய அடியார்களுக்கும் தந்தோம்" என்றார்.

இப்படி ஸ்வாமி ராமாநுஜர் மிகவும் உகந்து, அடியார்களுக்காக மோக்ஷம் பெற்ற நன்னாளாகத் திகழ்வது பங்குனி உத்திரம். 

(- ஸுந்தரவரத ராமாநுஜ தாஸன் )








873

பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண் 

அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும் * 

இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும் * 

அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே! (2)


874

வேதநூல்பிராயம்நூறு மனிசர்தாம்புகுவரேலும் * 

பாதியும் உறங்கிப்போகும் நின்றதில்பதினையாண்டு * 

பேதைபாலகனதாகும் பிணிபசிமூப்புத்துன்பம் * 

ஆதலால்பிறவிவேண்டேன் அரங்கமாநகருளானே! 


 முக நூலில் இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...


பெருமாள் திருவடிகளே சரணம் !!

தாயார்  திருவடிகளே சரணம் !!

ஓம் நமோ நாராயணாய நமக !!


அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. அழகான படங்கள். இங்கேயும் சேர்த்தி வைபவம் குறித்த படங்கள் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete