வைரமுடி பிரம்மோத்ஸவம் திவ்ய தரிசனம்.......
திருக்கல்யாணோத்ஸவம் -
875
மொய்த்தவல்வினையுள்நின்று மூன்றெழுத்துடையபேரால் *
கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான் *
இத்தனையடியரானார்க்கு இரங்கும்நம் அரங்கனாய
பித்தனைப்பெற்றும் அந்தோ! பிறவியுள்பிணங்குமாறே.
876
பெண்டிரால்சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபூண்டு *
உண்டு இராக்கிடக்கும்போது உடலுக்கேகரைந்துநைந்து *
தண்டுழாய்மாலைமார்பன் தமர்களாய்ப்பாடியாடி *
தொண்டுபூண்டமுதமுண்ணாத் தொழும்பர் சோறுஉகக்குமாறே!
முக நூலில் இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
ஸ்ரீ யதுகிரி தாயார் சமேத ஸ்ரீ திருநாராயண பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!
அன்புடன்
அனுபிரேம்
அழகிய படங்கள். இனிய பாசுரங்கள்.
ReplyDeleteஅழகிய படங்கள் - பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteமிக அழகிய படங்கள். நான் நேரலையிலும் தரிசனம் செய்தேன். படங்களும் வந்திருந்தன. செல்லப்பிள்ளையின் முக வசீகரம் அழகு. இவருக்காக இராமானுசர் காலத்தில் எடுத்த முயற்சிகள் நினைவுக்கு வந்தன.
ReplyDeleteதிருமாலை பாசுரங்கள் அருமை. திருநாராயண புரத்துக்கு ஏற்ற நாராயாணனைப் பற்றிய பாடலையும் பகிர்ந்துகொண்டிருந்திருக்கலாமோ? திருவரங்கனைப் பற்றிய பாடலாகிவிட்டதே.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. ஸ்ரீ மன்நாராயணனின் அழகான திவ்ய சொரூபமான படங்களை காணும் போது மனதிற்கு நிம்மதியாக உள்ளது. மேல்கோட்டை எம்பெருமானின் வைரமுடி தரிசனம் தரிசித்துக் கொண்டேன். பாசுரமும் பாடி மகிழ்ந்தேன். அழகிய படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகிய படங்கள். விரைவில் நேரில் தரிசிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
ReplyDelete