22 December 2016

சான்கி டேன்க், பெங்களூர் .... (sankey tank ,Bengalaru)

சான்கி டேன்க், பெங்களூர் ....  (sankey tank , Bengalaru)  ...



Malleshwaram   மற்றும்  Sadashiva  நகர்களின்  மத்தியில் பெங்களூரின்  மேற்கு பகுதியில் அமைந்துள்ளது . இந்த ஏரி யின் பரப்பளவு... சுமார் 15 ஹெக்டேர் (37.1 ஏக்கர்) .....


அங்கு  எடுத்த படங்கள்....











 இந்த ஏரி மதிய நேரத்தில்  மூடப்படும்....அந்த நேரத்தில் வெளியில் இருந்து எடுத்த காட்சி...


யாருமில்லா   தனிமையிலே...






அன்புடன்,

அனுபிரேம்




20 December 2016

தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் -8 --மயக்கும் மாய கண்ணன்.. ...

அனைவருக்கும்  நட்பான வணக்கங்கள் ....



இன்றைய  தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்தில்  மயக்கும் மாய கண்ணன்.. ... 







  


     
     



முந்தைய ஓவியங்கள் ...




ராதை கிருஷ்ணர்  ...



கண்டு ரசித்தமைக்கு மிகவும் நன்றி.....நட்புக்களே...




அன்புடன்
அனுபிரேம்..




15 December 2016

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி  சொக்கப்பனை கொளுத்தும்  நிகழ்வின்  படங்கள் இன்று......

உற்சவர் நம்பெருமாள் முதலாம் புறப்பாடாக  காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு வருவார்...

அங்கு நம்பெருமாள் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருமஞ்சனம் கண்டருள்வார்..... பின்னர் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றார்....


   அதன்பின் 2-ம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே நின்றபின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது...












































அருமையான நிகழ்வு.....அப்பாவும் அம்மாவும்....நேரில் சென்று தரிசித்தனர்....ஆனால் படங்கள் எடுக்க இயலாத அளவு மக்கள் நெருக்கமாம்....


எனவே படங்கள்   ஸ்ரீரெங்கம்.org  லிருந்து ...



அன்புடன்
அனுபிரேம்...



மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்

கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்

இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய

பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.



-தொண்டரடிப் பொடியாழ்வார்

முதல் திருமொழி (875)


.

11 December 2016

பாரதியின் வாழ்க்கை வரலாறு....!

பாரதியின் வாழ்க்கை வரலாறு....!




1882: டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27 ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். பிறப்பிடம் எட்டயபுரம் ஜமீன். 
தந்தை-சின்னச்சாமி அய்யர்; 

தாய்-லட்சுமி அம்மாள். 

இளமைப் பெயர் சுப்பிரமணியன். 

செல்லப் பெயர்- சுப்பையா.

1887: தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5.

1889: தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.

1893: 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ் சபையில் சோதித்து, வியந்து, பாரதி (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.

1894 முதல் 1897: திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப் பண்டிதருடன் சொற்போர்கள்.

1897: ஜூன். 14 1/2 வயது பாரதிக்கும் 7 வயதுச் செல்லம்மாவுக்கும் திருமணம்.

1898: ஜூன்; தந்தை மரணம். பெருந்துயர், சஞ்சலம்.

1898 முதல் 1902: காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம். படிப்பு அலகாபாத் ஸர்வ கலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேர்வு. காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம், ஹிந்தி பயின்றார். கச்சம், வால் விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம்.

1902 முதல் 1904: எட்டயபுரம் வாசம். மன்னருக்குத் தோழர். விருப்பமில்லா வேலை. மதுரை விவேகபாநுவில் தனிமை இரக்கம் என்ற முதல் பாடல் அச்சேறுகிறது.

1904: ஆகஸ்ட் - நவம்பர்; மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தற்காலிகமாகத் தமிழ்ப் பண்டிதர்.

1904: நவம்பர்; சென்னை சுதேச மித்திரன் உதவியாசிரியர். ஜி. சுப்பிமணிய அய்யரிடம் சிட்சை. சக்கரவர்த்தினி மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு.

1905: வங்கப் பிரிவினை. சமுக சீர்திருத்தவாதி பாரதி அரசியல் தீவிரவாதியாகிறார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்தித்து, ஞான குருவாக ஏற்றல்.

1906: ஏப்ரல்: சென்னையில் புரட்சிகரமான இந்தியா வாரப் பத்திரிகை உதயம். பாரதி பொறுப்பாசிரியர். மண்டயம் ந. திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி, சா. துரைசாமி அய்யர், வி. சக்கரைச்செட்டி, வ.உ.சி நட்பு. விபின சந்திரபாலர் சென்னை விஜயம். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிகை ஆரம்பம்.

1907: டிசம்பர்-; சூரத் காங்கிரஸ், திலகரின் தீவிரவாத கோஷ்டிக்கு ஆதரவு. வ.உ.சி., மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் கோஷ்டியைச் சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸில் பிளவு. திலகர், அரவிந்தர், லஜபதி, பாரதி சந்திப்பு.

1907: அரசியல் எதிரி, பழுத்த மிதவாதி வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போகிறார். சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்கப் பிரசுரம் நிறைய வெளியிட்டு, இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி அய்யர்.

1908: சென்னை தீவிரவாதிகள் கோட்டை. சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. பின்னர் மூவர் கைது; வ.உ.சி., சிவாவுக்குத் தண்டனை, சிறை வாசம், வழக்கில் பாரதி சாட்சியம் சொல்கிறார்.

1908: சுதேச கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிடுகிறார். முதல் நூல்.

1908 முதல் 1910: இந்தியாவும் புதுமை வந்து, பிரெஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் நுழையாதபடி, பிரிட்டிஷ் சர்க்கார் தடுக்கின்றனர். இந்தியா நின்று போகிறது.

1909: ஜன்மபூமி என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.

1910: விஜயா தினசரி, சூர்யோதயம் வாரப் பதிப்பு, பாலபாரத ஆங்கில வாரப்பதிப்பு, கர்மயோகி மாதப் பதிப்பு - யாவும் நின்று போகின்றன. சித்ராவளி ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டம் நிறைவேறவில்லை.

1910: ஏப்ரல்: பாரதி ஏற்பாடு செய்ய, அரவிந்தர் புதுவை வருகிறார். வேதநூல் ஆராய்ச்சி.

1910: நவம்பர்: கனவு என்ற ஸ்வயசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணி வாசகம் நூல் வெளியீடு. வ.வே.சு அய்யர் வருகை.

1911: மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை. புதுவைத் தேச பக்தர்கள் மீது சந்தேகம். போலீஸ் கெடுபிடிகள்; புதுவையிலிருந்து தேச பக்தர்களை வெளியேற்ற முயற்சிகள். பாரதியின் சிஷ்யகோடிகள் பெருகுகின்றனர்.

1912: உழைப்பு மிக்க வருடம். கீதை மொழி பெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரம்.

1913 முதல் 1914: சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி மறைந்து போகிறது. சுப்பிரமணிய சிவத்தின் ஞானபாநு பத்திரிகைக்கு விஷயதானம். தென் ஆப்பிரிக்கா நேடலில் மாதா மணிவாசகம் நூல் பிரசுரம். முதல் மகாயுத்தம் ஆரம்பம். புதுவைத் தேச பக்தர் தொல்லைகள் அதிகரித்தல்.

1917: கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி சு. நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.

1918: நெல்லையப்பர் சுதேச கீதங்களை நாட்டுப்பாட்டு என்று வெளியிடுகிறார்.

1918: புதுவை வாசம் சலித்துப்போய், புதுவையை விட்டு நவம்பர் 20 ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். கடலூர் அருகே கைது. ரிமாண்டில் 34 நாள். முடிவில், வழக்கில்லையென விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்துக்குச் செல்கிறார்.

1918 முதல் 1920: கடயம் வாசம். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள் பயனில்லை. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம்; நடைபெறவில்லை.

1919: மார்ச்; சென்னைக்கு விஜயம். ராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.

1920: டிசம்பர்: சென்னையில் சுதேசமித்திரனில் மீண்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி கட்டுரைகள் நிறைய எழுதுகிறார்.

1921: ஜூலை - ஆகஸ்ட்; திருவல்லிக்கேணி கோயில் யானை ஒதுக்கித் தள்ள, யானை காலடியில் கிடக்கிறார். குவளை காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார் கவிஞர்.

1921: செப்டம்பர்; யானை அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும் வயிற்றுக் கடுப்பு நோய் பீடிக்கிறது.

1921: செப்டம்பர் 11; நோய்க்கடுமை. மருந்துண்ண மறுப்பு.

1921: செப்டம்பர் 12; நள்ளிரவு தாண்டி, காலை 1.30 மணி சுமாருக்கு மறைவு. வயது 39 நிறையவில்லை.



Bharathiar Old Photos












Image result for பாரதி


Photo:


இன்று மகா கவியின்  பிறந்த தினம்... அவரின் நினைவாகவே இன்றைய பதிவு.. எத்துணை   அருமையான கவி....அவரின் வரிகளை வாசிக்கும் பேறு பெற்றோர் நாம் என்பதிலே மனம்  மகிழ்கிறது....

என்றும் வளர்க அவரின் புகழ்.....!

வாழ்க பாரதி....!

( அனைத்து செய்திகளும், படங்களும் இணையத்திலிருந்து சேகரித்தவை ....)

அன்புடன்,

அனுபிரேம்





09 December 2016

சேஷராயர் மண்டபம்...திருவரங்கம்...

வணக்கம்...

சேஷராயர் மண்டபம்   .... மாமன்னர் கிருஷ்ண தேவராயரால் ஆயிரம் கால் மண்டபத்தின் எதிரில் எழுப்பப்  பட்டதே இந்த சேஷராயர் மண்டபம்   ....

  மாமன்னர் கிருஷ்ண தேவராயர் தங்களது விஜயநகரப்  பேரரசின் வீரத்தைக் காட்டும் வகையில் மண்டபத்தின் முன் வரிசையில் பிரமாதமான கலை அழகுடன் எட்டு தூண்களை வடிவமைத்தார்....


குதிரை வீரர்களும்.. யாளி வீரர்களும் ..என அழகிய  சிற்ப வடிவங்களுடன் அணிசெய்யும் முகப்புத் தூண்களின்  அழகிய புகைப்படங்கள் இன்றைய பதிவில்....












ஆண்டாள்..









நரசிம்மர்..









 வெள்ளை  கோபுரம்...







அன்புடன்,
அனுபிரேம்.




02 December 2016

ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..

அனைவருக்கும் வணக்கம்...


இதுவரை  புதுச்சேரி  பயணத்தில்....


புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )


புதுச்சேரி ...  ஊசிட்டேரி   ஏரி  (ousteri lake  )..,,,


 ஆரோவில் (Auroville )   உதய நகரம்.... 


ஆரோவில் (Auroville )  அன்னை    என   ரசித்தோம்....


இன்று


ஆரோவில் கடற்கரை -

 ஆரோவில் அருகில் உள்ளதால் ஆரோ கடற்கரை என குறிப்பிடப்படுகிறது.  அது ஆரோவிலின்  எதிர் புறம், ECR சாலையின்  வலது பக்கத்தில் அமைந்துள்ளது.  புதுவையில் இருந்து  12 கி.மீ. தொலைவில் உள்ளது...








 இது ஆழமற்ற மற்றும் சிறிய அலைகள் கொண்ட கடற்கரை.... மிகவும் பிரபலமான இடமாகவும்  உள்ளது...  வார இறுதிகளில் மக்கள் வருகையும் அதிகமாக இருக்குமாம்...



நாங்கள் சென்றது  பவுர்ணமி நிலவில்....எனவே அலைகளும் பெரிதாக   ஆர்ப்பரிப்புடன் இருந்தன....


பசங்களுடன் சென்று ரசிக்க தக்க இடம்....



இதுவரை  எங்கள்  புதுவை  பயணத்தின் பதிவுகளை ரசித்தமைக்கு மிகவும் நன்றி...

மீண்டும் ஒரு அழகான பதிவுடன் மீண்டும் சந்திக்கலாம்.....

நன்றி.....வணக்கம்....




அன்புடன்
அனுபிரேம்