01 August 2017

அந்தர்வாகினி...



இந்த மாத புத்தக அலமாரியில் அந்தர்வாகினி...

( நதியாய் அவள் ஓடமாய் நான்...)



இதன் ஆசிரியர் சீதாலெட்சுமி....அவரின் தளம்


எனக்கு மிக பிடித்த நாவல் ஆசிரியர்..

பெரும்பாலும் இவரின் அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும்..

ஒவ்வொன்றும் ஒரு விதம்..அனைத்திலும் உணர்வுகளின் வழி கதையை  நகர்த்துவார்.....




இந்த முறை இவரின் நூல் பற்றிய அனுபவங்களையே பகிர வேண்டும் என முடிவு செய்தவுடன் எந்த புத்தகத்தை பற்றி எழுதலாம் என்ற யோசனையிலே ஒரு மாதம்  சென்றுவிட்டது...

கடைசியாக ....அந்தர்வாகினி நாவலின் வாசிப்பு அனுபவத்தையே இங்கு பகிரலாம் என  முடிவு செய்தேன்..


ஆசிரியர் அவரின் தளத்தில் பதியும் போது அந்தர்வாகினி....

நூலாக வரும் போது நதியாய் அவள் ஓடமாய் நான் ..

எனக்கு அந்தர்வாகினி என்னும் பெயரே மிகவும் பிடித்து இருந்தது....






இந்த புத்தகம் பல விதமான முகம் கொண்டது...


நாயகி அபிரத்னா....

நாயகன் கார்த்தி...


ரொம்ப எதார்த்தமான சிறப்பான கதைகளம்....


நம்மையும் கல்லூரி காலத்திற்கு அழைத்து சென்று பல மாணவ குறும்புகளையும் நல் நகைச்சுவையுடன் ரசித்து சிரிக்க வைக்கும்....


அதிலும் பாடம் படிக்க அமரும்  முன் போது தோன்றும் உணர்வுகளை கதை நாயகி பகிரும் முறை ..வாவ் அருமையாய் இருக்கும்...



சென்னை வெள்ளத்தின்  பாதிப்புகளை நம் முன் கொண்டுவந்து அதன் நிதர்சனத்தையும் பாதிப்புகளையும் நம்மையும் உணர வைக்கும்.....


நெகிழ்ச்சியான நிமிடங்கள்....


உழைத்து உருவாக்கிய  ஒரு  சிறு கூடு கலையும் போது ஏற்படும் வலியும்...

அதை தாண்டி வெளிவர கொணரும் எண்ணங்களும் ..ஆஹா....தன்னம்பிக்கை  ஒளிகள்.....



குடும்பத்தை விட்டு ..குடும்பத்திற்காக தனியாக வெளிநாட்டில் உழைக்கும் ஒரு தகப்பனின் உணர்வுகளை..


அவரின் பெண்ணின் உணர்வின்   வழியாக    புரியவைப்பதும்.... அனைத்தும் அழகு...




நாயகன் நாயகி  இருவரும்  இரு வேறு கோணங்கள்..

ஒருவர் மிக எதார்த்தவாதி  ....எதையும் எளிதாக ...அதே சமயம் சமயோசிதமாக கடந்து செல்லும் நிலை.... ..

அடுத்தவர் அனைத்தையும்  உணர்வின் வழி பார்ப்பவர்..


இருவரின் பார்வையும் சரியே....

ஆனால் அவர்களின் எண்ணத்தின் வழி நம்மையும் செலுத்துவது ஆசிரியரின் பாங்கு...



படிப்பதற்கு மிகவும் அருமையான நாவல்....

வாய்ப்பு கிடைப்பின் படித்து ரசியுங்கள்....



அன்புடன்
அனுபிரேம்



7 comments:

  1. விமர்சனம் அருமை சகோ வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்லதொரு நூல்/தளம் அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  3. நல்ல ஒரு நூல் அழகான விமர்சனத்துடன் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ/அனு. முன்பே நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்ற நினைவு. தளத்தை அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ...

      கருத்துக்கு நன்றி...


      ஆனால் முன்பு பகிர்ந்தது தமிழ் மதுராவின் ...சித்ராங்கதா நூலை பற்றி.....

      Delete
  4. அருமையான அறிமுகம்
    அவசியம் படிப்பேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம்.
    வாழ்த்துக்கள் ஆசிரியருக்கும், உங்களுக்கும்.

    ReplyDelete
  6. அந்தர்வாகினி ... அட! கவர்கிறது.

    பாரதியின் வரிகளைப் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete