30 January 2018

கொண்டைகடலை வடை...



வாழ்க வளமுடன்


எளிய இனிய உணவு....கொண்டைகடலை வடை...வழக்கமான வடை செய்முறை தான்.....

இன்றைய படங்களுக்கான சமையலில்...











தேவையானவை....



வெள்ளை கொண்டைகடலை - 3 கப்

கடலை பருப்பு                                    - 1/2 கப்

வர மிளகாய்    - 6 - 8

பூண்டு             - 6 -8

இஞ்சி                   - 1/2 அங்குல

நறுக்கிய வெங்காயம் -  1 கப்

உப்பு

எண்ணெய்..




செய்முறை...



கொண்டைகடலை, கடலை பருப்பு இவைகளை  நன்கு 6 மணிநேரம்
 ஊறவிட்டு... பின் மிளகாய், பூண்டு, இஞ்சி, சேர்த்து கர கரப்பாக அரைக்கவும்....

அதில்  நறுக்கிய வெங்காயம் , உப்பு சேர்த்து கலந்து ...பின் தட்டி எண்ணையில் பொரித்தால் ...சுவையான வடை ரெடி...

முட்டைகோஸ், கொத்தமல்லி இவைகளும் சேர்க்கலாம்...
















அன்புடன்,

அனுபிரேம்...






10 comments:

  1. புகைப்படத்தில் அழகாக இருக்கிறது எடுத்துதான் சாப்பிட முடியவில்லை.

    ReplyDelete
  2. ஆஹா.. அருமை!
    கொண்டைக்கடலையில் என்ன செய்தாலும் அதன் ருசி அலாதிதான்...:)

    ReplyDelete
  3. ஆகா...

    பார்க்கும் போதிலே பரவசம் மிகவாகுதே...

    எங்கள் பிளாக்கிற்கும் தங்களது அறுசுவைப் பதிவுகளை அனுப்பி வையுங்களேன்..

    ReplyDelete
  4. நன்று, நானும் கையில் கிடைக்கும் தானியத்தில் எல்லாம் வடை சுடுவேன்... எப்படியாவது எல்லோரும் சாப்பிடோணும் தானியங்களை எனும் நல்லெண்ணத்தில்...

    ReplyDelete
  5. வித்யாசமா இருக்கே அனு .கண்டிப்பா செய்து பார்க்கிறேன்

    ReplyDelete
  6. ஈசியான செய்முறை. பார்க்கவே நன்றாக இருக்கு அனு. பாரதி வரிகள் அருமை.

    ReplyDelete
  7. சுவையான வடை! அனு நான் அடையிலும் கொண்டைக்கடலை சேர்த்து அரைப்பதுண்டு. வடையில் கொண்டைக்கடலையுடன் பட்டாணிப்பருப்பும் சேர்த்துச் செய்வதுண்டு. அல்லது பட்டாணிப்பருப்பு மட்டும் போட்டும் செய்வதுண்டு. மசால்வடைக்கு உகந்த பருப்பு ரொம்ப டேஸ்டியா இருக்கும். சூப்பரா இருக்கு உங்க வடை. அப்படியே எடுக்க முடிந்தால் எடுத்துச் சாப்பிட்டிருப்பேன்...கொண்டைக்கடலையே ருசியான ஒன்று

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அடையிலும் கொண்டைக்கடலை யா...ஆஹா நல்ல ஐடியா செய்து பார்க்கிறேன்...

      பட்டாணிப்பருப்பு பத்தி எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும் கீதாக்கா....நானும் வாங்கி வச்சு இருக்கேன் ..செய்யணும்...

      Delete
  8. வடை அருமையாக இருக்கிறது.
    பருப்பு வடை மொறு மொறு என்று இருந்தால் சாப்பிட சுவை அதிகம்.
    பார்க்கவே அழகு வடை.

    பாரதி வரிகள் பகிர்வு அருமை.

    ReplyDelete