31 August 2020

ஆதிப்ரமோத்ஸவம் - நெல் அளவை, ஸ்ரீரங்கம்

 வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு ஆதிப்ரமோத்ஸவம் - கருட சேவை, ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளன்று (17/08/20) காலை ஶ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருவிசிகையில் புறப்பட்டு கருட மண்டபத்தை அடைந்தார்.


 பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க சேஷ வாகன சேவையில் அனைவருக்கும் அருள்பாலித்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தை சென்றடைந்தார். 











ஐந்தாம் நாள்  மாலை - கற்பக விருக்ஷம் வாகனத்தில் புறப்பாடு












ஆதிப்ரமோத்ஸவம் ஆறாம் நாள்  மாலை - தோளுக்கினியான் புறப்பாடு







ஆதி பிரம்மோட்ச்சவம் 7-ம் நாள்  மாலை ஸ்ரீநம்பெருமாள் (பாண்டியன் கொண்டை, விமான பதக்கம் அலங்காரத்தில்) - உபய நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுளினார் ....








ஆதி பிரம்மோட்ச்சவம் 8-ம் நாள் மாலை ஸ்ரீநம்பெருமாள் தங்ககுதிரை வாகன சேவை 










திருவாய்மொழி - ஏழாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி – கங்குலும்பகலும் 


3350

வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும்

வானமே நோக்கும்மையாக்கும் *

உட்குடை அசுரருயிரெல்லாமுண்ட

ஒருவனே! என்னும் உள்ளுருகும் *

கட்கிலீ! உன்னைக் காணுமாறு  அருளாய்

காகுத்தா! கண்ணனே! என்னும் *

திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்?

இவள் திறத்தென் செய்திட்டாயே?

3


3351

இட்டகாலிட்டகையளாய் இருக்கும்

எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும் *

கட்டமே காதலென்று மூர்ச்சிக்கும்

கடல்வண்ணா! கடியை காணென்னும் *

வட்டவாய் நேமிவலங்கையா! என்னும்

வந்திடாயென்றென்றே மயங்கும் *

சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!

இவள் திறத்தெஞ்சிந்தித்தாயே?


4




ஆதிப்ரமோத்ஸவம் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....


ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம் ...

அன்புடன்

அனுபிரேம்

4 comments:

  1. வணக்கம் சகோதரி

    ஸ்ரீ ரெங்கநாதனின் அற்புத தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன். படங்கள் வெகு அழகு. ஒவ்வொரு வாகனங்களில் பவனி வந்த எம்பெருமானின் அழகை காண கண் கோடி வேண்டும். தங்க குதிரை வாகனத்தில் அவரின் கம்பீர தரிசனம் சிறப்பு. பக்தியுடன் சேவித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. நம்பெருமாள் தரிசனம் அற்புதம்.

    இவ்வளவு பெரிய கோவிலில், எல்லா உத்சவங்களையும் இப்படி இப்படி நடத்த வேணும் என்று ஒழுங்குபடுத்திவைத்த ஆச்சார்யரை நினைத்துக்கொள்கிறேன். எவ்வளவு யோசனைகள் செய்து இதனை ஒழுங்குபடுத்தியிருப்பார் என

    ReplyDelete
  3. கண்கொள்ளாக்காட்சி. மனதிற்கு நிறைவைத் தருகின்ற பெருமாளின் தரிசனம்.

    ReplyDelete
  4. மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் - படங்களைக் கண்டு!

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete