இன்று குலசேகராழ்வார் அவதார திருநட்சத்திரம் ..... மாசி -புனர்பூசம்
குலசேகராழ்வார் வாழி திருநாமம்!
அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே!
அணியரங்கர் மணத்தூணை அடைந்துஉய்ந்தோன் வாழியே!
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே!
மாசிதனில் புனர்பூசம் வந்துஉதித்தான் வாழியே!
அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே!
அநவரதம் ராம கதை அருளுமவன் வாழியே!
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே!
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்துஉய்ந்தோன் வாழியே!
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே!
மாசிதனில் புனர்பூசம் வந்துஉதித்தான் வாழியே!
அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே!
அநவரதம் ராம கதை அருளுமவன் வாழியே!
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே!
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே
குலசேகராழ்வார்
பிறந்த காலம் - 9ம் நூற்றாண்டு
பிறந்த இடம் - திருவஞ்சிக்களம்
பிறந்த மாதம் - மாசி
திருநட்சத்திரம் - புனர்பூசம்
வேறு பெயர்கள் - கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே
சிறப்பு - ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்
பிரபந்தங்கள்- முகுந்தமாலா, பெருமாள் திருமொழி
பரமபதம் அடைந்த இடம் - திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்
பிறந்த காலம் - 9ம் நூற்றாண்டு
பிறந்த இடம் - திருவஞ்சிக்களம்
பிறந்த மாதம் - மாசி
திருநட்சத்திரம் - புனர்பூசம்
வேறு பெயர்கள் - கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே
சிறப்பு - ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்
பிரபந்தங்கள்- முகுந்தமாலா, பெருமாள் திருமொழி
பரமபதம் அடைந்த இடம் - திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்
பெருமாள் திருமொழி
எட்டாம் திருமொழி - மன்னுபுகழ்
சக்கரவர்த்தித்திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம்
மன்னுபுகழ்கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே! *
தென்னிலங்கைகோன்முடிகள் சிந்துவித்தாய்! * செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்து என்கருமணியே! *
என்னுடையஇன்னமுதே! இராகவனே! தாலேலோ. (2)
1 719
புண்டரிகமலரதன்மேல் புவனியெல்லாம்படைத்தவனே! *
திண்திறலாள்தாடகைதன் உரமுருவச்சிலைவளைத்தய்! *
கண்டவர்தம்மனம்வழங்கும் கணபுரத்து என்கருமணியே! *
எண்திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ.
2 720
கொங்குமலிகருங்குழலாள் கோசலைதன்குலமதலாய்! *
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ! *
கங்கையிலும்தீர்த்தமலி கணபுரத்து என்கருமணியே! *
எங்கள்குலத்து இன்னமுதே! இராகவனே! தாலேலோ.
3 721
தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே! *தயரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன்மணவாளா! * வண்டினங்கள்
காமரங்களிசைபாடும் கணபுரத்து என்கருமணியே! *
ஏமருவும்சிலைவலவா! இராகவனே! தாலேலோ.
4 722
பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீராளும் வரைமார்பா! திருக்கண்ண புரத்தரசே ! *
தாராளும் நீண்முடி என்தாசரதீ ! தாலேலோ *
5 723
சுற்றமெல்லாம்பின்தொடரத் தொல்கானமடைந்தவனே! *
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்திநகர்க்கு அதிபதியே! *
கற்றவர்கள்தாம்வாழும் கணபுரத்து என்கருமணியே! *
சிற்றவைதன்சொற்கொண்ட சீராமா! தாலேலோ.
6 724
ஆலினிலைப்பாலகனாய் அன்று உலகமுண்டவனே! *
வாலியைகொன்று அரசுஇளையவானரத்துக்கு அளித்தவனே! *
காலின்மணிகரையலைக்கும் கணபுரத்து என்கருமணியே! *
ஆலிநகர்க்ககு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ.
7 725
மலையதனால் அணைகட்டி மதிளிலங்கையழித்தவனே! *
அலைகடலைக்கடைந்து அமரர்க்கு அமுதருளிச்செய்தவனே! *
கலைவலவர்தாம்வாழும் கணபுரத்து என்கருமணியே! *
சிலைவலவா! சேவகனே! சீராம! தாலேலோ. (2)
8 726
தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்தன்குலமதலாய்! *
வளையஒருசிலையதனால் மதிளிலங்கையழித்தவனே! *
களைகழுநீர்மருங்கலரும் கணபுரத்து என்கருமணியே! *
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ.
9 727
தேவரையும் அசுரரையும் திசைகளையும்படைத்தவனே! *
யாவரும்வந்து அடிவணங்க அரங்கநகர்த்துயின்றவனே! *
காவிரிநல்நதிபாயும் கணபுரத்து என்கருமணியே! *
ஏவரிவெஞ்சிலைவலவா! இராகவனே! தாலேலோ. (2)
10 728
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்து என்காகுத்தன்! *
தன்னடிமேல் * தாலேலோஎன்றுரைத்த தமிழ்மாலை *
கொல்நவிலும்வேல்வலவன் குடைக்குலசேகரஞ்சொன்ன *
பன்னியநூல்பத்தும்வல்லார் பாங்காயபத்தர்களே (2)
11 729
ஓம் நமோ நாராயணாய நம!!
குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!
அன்புடன்
அனுபிரேம்...
இன்று ஆன்லைனில், பெருமாள் திருமொழி, முகுந்தமாலா சேவித்தோம். அதனால் இங்கு வர தாமதம்.
ReplyDeleteஎப்போதும்போல நன்றாக எழுதியிருக்கீங்க.
இரு ஆண்டுகளுக்கு முன்பாக மன்னார்கோவில் போய் குலசேகராழ்வாரின் பிருந்தாவனத்தைச் சேவித்தோம். அவர் ஆராதித்த இராம விக்ரஹம் மிகப் பெரியது, மிக அழகானது. அந்தக் கோவிலில் அதனையும் சேவித்தோம் (இந்த மன்னார்கோவில் இராஜகோபாலஸுவாமி கோவில் மிக மிகப் பெரிய கோவில். கண்டிப்பா சேவிக்கவேண்டிய கோவில். நெல்லையிலிருந்து பக்கம்)