முந்தைய பதிவுகள்
2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி
3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்
11.கோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்
பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், வால்ப்பாறையிலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஆழியார் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துடன் 1959 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டத்தாகும்.
இந்த அணைக்கட்டில் அழகிய பூங்காவும் உள்ளது.
இந்த அணையின் அருகில் தான் வேதாத்ரி மகரிஷியின் அறிவுத் திருக்கோயில் உள்ளது. ஆனால் அங்கு நாங்கள் செல்லவில்லை .
பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான அணையாகும் இந்த ஆழியாறு அணை. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த மிக அழகிய இடம் இது .
புல்வெளி பகுதிகள் எல்லாம் பரவாயில்லை என்னும் நிலையில் இன்னும் சிறப்பாக பராமரிப்பு பணிகள் செய்யலாம்.நிறைய குரங்கார்கள் இருந்தார்கள் .
மேலும் இவ்வளவு பெரிய இடத்தில் சரியான கழிவறை வசதிகள் கூட இல்லை.
அருமையான இடம். நல்ல மழை நேரத்தில் அல்லது நீர்ப்பிடிப்பு நேரத்தில் போயிருந்தால் கடல்போல நீர் பார்த்திருக்கலாம்.
ReplyDeleteபடங்கள் மிக அழகு
புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு! 25 வருடங்களுக்கு முன் டாப் ஸ்லிப் சென்றது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteபடங்கள் அருமை... பலமுறை சென்று உள்ளோம்...
ReplyDeleteபடங்கள் அழகு. நாங்களும் ஒரு கோவை பயணத்தின் போது இங்கெல்லாம் சென்று வந்தோம்.
ReplyDelete