வாழ்க வளமுடன் ...
கோழிக்கமுத்தி யானைகள் முகாம்...
வனப் பணிகளிலும், வனத்திற்குள் சவாரி மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று காட்டு யானைகளை அடக்குவது உள்ளிட்ட பல பணிகளிலும் இங்குள்ள யானைகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றன.
முந்தைய பதிவுகள்
2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி
3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்
![]() |
![]() |
தூரமாய் பல யானைகள் ... |
இங்கு பல பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் இங்கிருக்கின்றன.
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மலைவாழ் இனத்தவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இம்முகாமை பராமரித்து வருகிறார்கள்.
வனங்களில் சுற்றித் திரியும் இந்த யானைகள் தினமும் மாலை 5.30 மணியளவில் முகாமுக்கு வருகிறது. அங்கு அவர்களின் தினப்படி வேலை அட்டவணை கீழே....
என்ன ஒரு அருமையான இடம் ...நாங்கள் சென்றது காலை 7 மணிக்கு யானைகள் எல்லாம் உணவு உண்ண தயாராக இருந்தன . ஒரே இடத்தில் பல யானைகள் பார்க்கவே மிக அழகாக இருந்தது.
நாங்கள் சென்ற பொழுது பரவலாக சின்னத்தம்பி யானை பற்றி பேசிக் கொண்டிருந்த நேரம் ... அந்த யானை மலைக்கு அந்த பக்கம் உள்ளதாக கூறினார்கள் .
சுற்றிலும் மலை, நடுவில் யானைகள் என ரம்மியமான இடம் ...
உணவு முறைகள் ...
யானைகளுக்கு இங்கு காலையிலும் மாலையிலும் உணவுகள் வழங்கப்படுகிறது.
இந்த உணவு தயாரிக்கும் பணியினை கவாடிகள் மேற்கொள்கிறார்கள்.
யானைகளுக்கு எப்போதாவது முடியாமல் போகும் பட்சத்தில் தான் மருந்துகள் வழங்கப்படுகிறது. கொள்ளு, அரிசி சாதம், ராகி களியுடன், உப்பு, வெல்லம், விசேச தினங்களில் கரும்பு மற்றும் வாழைப்பழங்களும் உணவாக தரப்படுகிறது.
எங்களுடன் வந்த உதவியாளர் யானைகளின் உணவுமுறைகளை கூறினார் . மேலும் இங்கு கொடுக்கப்படும் உணவுகள் எல்லாம் அவற்றிற்க்கு போதுமானது அல்ல ...அவைகள் தாமே காட்டிற்கு சென்று அசைபோடுவதை தான் விரும்பும் என்றார் ...
அதனை பாகன்கள் எடுத்து சென்று ஊட்டுகிறார்கள் .. சில யானைகள் அழகாக சாப்பிடுகின்றன .. சில யானைகள் துப்பிவிடுகின்றன.... பார்க்கவே குழந்தைகள் உணவு உண்பது போல இருந்தது ...
![]() |
டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் 9 பெண் யானைகள் உள்பட மொத்தம் 25 யானைகள் உள்ளன. இதில் 5 கும்கி யானைகளும் அடங்கும்.
எங்களுக்கு 2 மணிநேரம் அங்கிருக்கும் வாய்ப்பு கிடைத்தது , மாலை வந்து இருந்தாலும் இத்தகைய அழகிய காட்சிகளை கண்டு இருக்க முடியாது. மிகவும் இனிய காலையும் அழகிய காட்சிகளும், குழந்தைகள் ,பெரியவர்கள் அனைவரும் ரசித்து இந்த இடத்தை கண்டோம். யானைகள் உணவு உண்ட பின் காட்டிற்கு செல்லுகின்றன ....
நாங்களும் மீண்டும் எங்கள் இடம் நோக்கி புறப்பட்டோம் ..
தொடரும்...
படங்களும் தகவல்களும் நன்று. யானைகள் - எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காதவை. தொடரட்டும் பயணங்களும் பதிவுகளும்.
ReplyDelete