16 December 2021

முதல் பாசுரம் - மார்கழித் திங்கள்

 முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.










மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்

      நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

      கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

      கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்!

     பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்



செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் க்ருஷ்ண கைங்கர்யம் என்னும் செல்வத்தை உடைய இளம் பெண்களே! 

சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே!

 மார்கழி பௌர்ணமி தினத்தில் நல்ல நாள் அமைந்துள்ளது. 

கூர்மையான வேலை உடையவரும் கண்ணனுக்குத் தீங்குபுரியும் ஜந்துக்களை அழிக்கும் கொடுஞ்செயலை உடையவருமான நந்தகோபருக்கு அடங்கிய பிள்ளையும் அழகு பொருந்திய கண்களையுடைய யசோதைப் பிராட்டியின் சிங்கக்குட்டி போன்றவனும் கறுத்த மேகத்தைப் போன்ற திருமேனியையும் சிவந்த கண்களையும் ஸூர்யனையும் சந்த்ரனையும் போன்ற முகத்தையும் உடையவனுமான கண்ணனான நாராயணன் எம்பெருமானே அடியார்களான நமக்கே கைங்கர்யத்தைக் கொடுப்பவன். 

ஆகையால், இவ்வுலகோர் எல்லோரும் புகழும்படி க்ருஷ்ணானுபவத்தில் நன்கு நீராட விருப்பம் உள்ளவர்களே! வாருங்கள்.


நன்றி - Upasana Govindarajan Art













சூடிக்கொடுத்த நாச்சியார் - பெரிய கோயில்.



ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. நன்னாளில் சிறப்பான தொடர் பதிவு ஆரம்பம். மகிழ்ச்சி.

    ReplyDelete