20 June 2025

6. பைக்காரா நீர்வீழ்ச்சி

 வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள்...  





ஊட்டி - கூடலூர் முக்கியச் சாலையில் இந்த பைக்காரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

பைக்காரா நதியிலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், பரவசம் தர கூடியதாகவும் இருக்கும். கரடுமுரடான குன்றுகளினால் இரண்டு அடுக்குகளாகப் பிரிந்து விழும் இந்த அருவி 55 முதல் 61 மீட்டர் அளவில் விழுகிறது.

பசுமையான காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது. மழைக்காலங்களில் இன்னும் கூடுதல் அழகுடன் காட்சியளிக்கும் இந்தப் பகுதியில், சில இடங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளது. 









சிறு வயதில் பல முறை சென்ற இடம். அதே போன்ற பால்  வண்ண நீரும், இடமும் என்னை அன்று போல இன்று இன்னும் கவர்ந்து இழுக்கிறது. எத்தனை ரம்மியமான இடம் ...கொள்ளை அழகு. நீரின் சலசலப்பும் அழகும் மனதிற்கு புத்துணர்ச்சியும், பேரமைதியும் தருகின்றன.












இந்த பைக்காரா நீர்வீழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைத் திறந்திருக்கும். அதேபோல் நுழைவுக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரையாகும். அருவியில் நீர் அழகாக இருந்தாலும், பாறைகள் இருப்பதால் நீச்சலடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ள அற்புதமான இடம்.சிறிது மலைமேல் மேலும் கீழும் என நடந்தே இந்த இடத்தை சென்று அடைய முடியும். அத்தனை  நடைக்கும் மேல் அழகு அங்கு கொட்டி  கிடக்கின்றது.  





தொடரும்..... 

அன்புடன் 
அனுபிரேம் 💞💞








2 comments:

  1. படங்கள் பிரமாதம் அனு.

    இந்த அருவி ஊட்டி - கூடலூர் சாலையிலா...ஓகே நான் கூடலூர் வழி பயணித்திருக்கிறேன். ஆனா இன்னும் ஊட்டியே போனதில்லை. ஊட்டியை விட எனக்கு அதன் உட்பக்கங்கள் செல்லவே ஆசை. எல்லோரும் சொல்லும் சுற்றுலா தலங்களை விட...முதுமலை பந்திப்பூர் போக ஆசை. இத்தனைக்கும் இங்கிருந்து அதிக தூரம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் சூழல் இல்லை தற்போது.

    அருவியின் படங்கள் ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க அனு. ரசித்தேன் அழகா இருக்கு.

    கீதா

    கூடவே

    ReplyDelete
  2. காணொளிகளையும் ரசித்தேன் அனு

    கீதா

    ReplyDelete