பராபவ ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு -வாழ்த்துகள் !!
நம்பெருமாள் சித்திரை முதல் நாள் ஆஸ்தான மண்டப சேவை
![]() |
இன்று(14/04/26) பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு.
"பராபவ " (Paraabhava) என்றால் தமிழில் --வெளிப்புற சக்திகள்/மற்றவர்களால் ஏற்படும் பிர்ச்சினைகள்/விளைவுகள் எனப் பொருள்படும்.
பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் பராபவ விளைவுகள் நம்மைப் பெரிதும் பாதிக்காது !
பராபவ ஆண்டு வெண்பா !
பராபவ ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் அறுபது வருட வெண்பா:
"மிக்க பராபவத்தின் மேதினியிற் பின்மழையாம்
தக்க பசுக்கடழைக்குமே - இக்குப்
பலிக்காது நான்கு வகைப் பல்லுயிர்க்கும் இன்பம்
கலிக்காதனவே கருது"
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில்,பருவமழை சற்றுத் தாமதமாகவோ அல்லது குறைவாகவோ பொழியும். இருப்பினும்,கால்நடைகள் செழிக்கும்;பால் வளம் பெருகும். பசி மற்றும் வறுமை நீங்கி, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர்
அனைவரும் பராபவ ஆண்டில் "செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ" பிரார்த்திப்போம்.
காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள்
![]() |
அன்புடன்


No comments:
Post a Comment