![]() |
| உடையவர் ஸ்ரீரங்கம் |
இராமானுச நூற்றந்தாதி
நாற்பத்தாறாம் பாசுரம். எம்பெருமானார் செய்தருளின உபகாரத்தை நினைத்துப் பார்த்து அதக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகிறார்.
கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே
வார்த்தை ஜாலமாய் மட்டும் இருக்கிற பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாத) ஆறு ஸமயங்களும் சிதிலமாய்ப்போம்படியாக இந்த தேசத்திலே ஆழ்வாரருளிச்செய்த த்ராவிடவேதமான திருவாய்மொழியை நன்றாக உணர்ந்தவர் எம்பெருமானார். ஞானமில்லாத நான் கீழ்ப்பாசுரத்தில் சொன்னபடி அவரே ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) என்று நம்பியிருக்கும்படி என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தருளினார் எம்பெருமானார். இவற்றாலே எல்லா திசைகளிலும் ப்ரஸித்தமான கல்யாண குணங்களையுடையரான அவரை நாம் வணங்கினோம்.
![]() |
| காஞ்சிபுரம் உடைவர் திவ்ய சேவை |
இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே
![]() |
| திருவல்லிக்கேணி சுவாமி ராமானுஜர் திவ்ய சேவை |
உபதேச ரத்தின மாலை
இருபத்தொன்பதாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரையின் வைபவத்தை எப்பொழுதும் நினைத்திரு என்று தன் நெஞ்சைக் குறித்து அருளிச்செய்கிறார்.
நெஞ்சே! எமக்கு ஸ்வாமியான யதிராஜர் இந்த உலகத்திலே வந்துதித்த பெருமை பெற்ற நாளான சித்திரையில் திருவாதிரையின் சிறப்பைத் தவறாமல் எக்காலத்திலும் ஆராய்ந்து அனுபவிக்கவும்.
முந்தைய பாசுரங்களில் உலகத்தவர்களுக்கு உபதேசித்தார். இப்பாசுரத்திலே தானே இந்த நன்னாளின் வைபவத்தில் ஈடுபட்டு அனுபவிக்கிறார்.
எம்பெருமானார் தாமே “அகில ஜகத் ஸ்வாமின்! அஸ்மத் ஸ்வாமின்” (எல்லா உலகுக்கும் நாதனே! எனக்கு நாதனே!) என்று எம்பெருமான் விஷயமாக ஸ்ரீகத்யத்தில் அனுபவித்ததைப் போலே, இவரும் கீழ்ப் பாசுரங்களில் எம்பெருமானார் உலகுக்குச் செய்த நன்மையை அனுபவித்து, இப்பாசுரத்தில் தனக்குச் செய்த நன்மையை அனுபவிக்கிறார்.
![]() |
| திருமலை சுவாமி ராமானுஜர் திவ்ய சேவை |
முந்தைய பதிவுகள்...
1.ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி எம்பெருமானார் திவ்யலங்கார திவ்யசேவை -2026
2.எம்பெருமானார் ஸ்ரீ ராமாநுஜரின் 1009 ஆவது திருநட்சத்திரம் 2026
மேல்கோட்டை - “தமர் உகந்த திருமேனி” 2025
ஸ்ரீபெரும்புதூரில் --- “தானுகந்த திருமேனி” 2025
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர புறப்பாடு (2023).....
அன்புடன்
அனுபிரேம்💖💖










No comments:
Post a Comment