28 October 2017

பொய்கையாழ்வார்...


பொய்கையாழ்வார்

இன்று( 28 . 1௦ .2௦17)  பொய்கையாழ்வார் அவதார தினம் .....

ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில்   அவதரித்தவர்

இவர்.....







பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!


செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே

வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே 

வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே 

வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே 

வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே

பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே

பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே......  !




பொய்கையாழ்வார்  



ஆழ்வார்கள் என்றால் வேதத்தாலும் அளவிட்டு அறிய இயலாத பெருமாளின் எல்லா குணங்களையும் அவனருளாலே அறிந்து அனுபவிக்கும் ஞானம் பெற்றவர்கள் என்று கூறலாம்.


மொத்தம் பன்னிரெண்டு ஆழ்வார்கள்.


அவர்களுள்  முதலாழ்வார் .........பொய்கையாழ்வார்


பொய்கையாழ்வாரான   இவர்


திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக...


 சித்தார்த்தி வருஷம்   ஐப்பசி மாதம் வளர்பிறையாம் அஷ்டமி திதியில்,

 செவ்வாய்க்கிழமை  திருவோண நட்சத்திரத்தில்,


காஞ்சிபுரத்தில் திருவெஃகாவை அடுத்த ஒரு பொய்கையில்


பொற்றாமரை மலரில் அவதரித்தார்.


அவர் பொய்கையில் பிறந்ததால் அவருக்கு இந்தப் பெயர்.
















 முதன் முதலில் மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி பாடியவர் ..


 இவரின்  நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி என்று அழைக்கப்படுகிறது.


 பிறவிலேயே  ஞானங்கள் பெற்று பிறந்தவர்...









தளிர் நடைபயிலும் பருவத்திலேயே அருந்தமிழ்கலையும் வேதபுராணங்களும் கற்றுணர்ந்தார்.


இருமைக்கும் துணை புரிவது திருமாலுக்குச் செய்யும் திருத்தொண்டு ஒன்றேயாகும் என்பதை நிலையாக நெஞ்சில் பதித்துக் கொண்டார்.


அல்லும் பகலும் பெருமாளின் அடிமலர் புகழ்ப் பாடிவரும் ஸ்ரீவைஷ்ணவ பக்தர்கள் இவரைப் பொய்கை ஆழ்வார் என்றே போற்றிப் பணிந்தனர்.


 என் காதுகள் எப்போதும் அவன் புகழையே கேட்க விழைகின்றன்....


என் தூயமனம் ஆழிவண்ணனையன்றி வேறோருவரை நாடுவதில்லை....


என் விழிகள் அவனையே உற்று நோக்குகின்றன்....


எனது நாவானது நாராயணின் திருப்பெயர் எப்பொழுதும் சொல்ல விரும்புகிறது....


என் நாசி எம்பெருமானின் திருமேனியிலுள்ள துளசி மாலை மணத்தையை முகர விரும்புகின்றன.....


 எனது கால்கள் ரங்கநாதனின் பல்வேறு திருக்கோலங்களோடு வீற்றிருக்கும் திருக்கோவில்களை கண்டு வரவே பெரிதும் விரும்புகின்றன.....


 என்று பொய்கையாழ்வாரின் உள்ளம் விஷ்ணுவையே நினைத்து கொண்டிருந்தது.


பொய்கையாழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து பரமனையே கண்டதுபோல பெருமிதம் பூண்டனர்.




காஞ்சியிலுள்ள பதினெட்டு வைஷ்ணவ ஷேத்திரங்களிலும் மங்களாசாஸனம் செய்து பரமனைப் போற்றினார் பொய்கையாழ்வார்.



ஹரியும் சிவனும் ஒன்றுதான்.


ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.


சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம்.


இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு    சேவை செய்தும் வாழ்ந்து வந்தார்.

இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும்,

இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார்.


கீழ்மை குணம் படைத்தாருடைய நட்பைக் கனவிலும் நினைக்க மாட்டேன்.


 பிறப்பிலும் சிறப்பிலும் உயர்ந்த பெரியோர்களையே நான் பெரிதும் மதித்து அவர்களுடன் கூடி வாழ்வேன்.


பிறரோடு கலந்து வாழ என்மனம் எப்போதுமே இடந்தராது.


புயல் வண்ணனையன்றி மற்றைய தெய்வங்களை யான் புகழ்ந்து பாடவும் மாட்டேன். வணங்கவும்  மாட்டேன்.


 ஆகையால் எம்மை நாடி இனி பிறப்பு – இறப்பு என்னும் துன்பங்கள் வருவதற்கு வழியே கிடையாது  என்கிறார் பொய்கையாழ்வார்


பின் பல  ஷேத்திரங்களைத் தரிசித்துக் கொண்டே திருக்கோவிலூரை பொய்கையாழ்வார் வந்தடைந்தார்.


அத்திருநகரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமானைத்தரிசிக்க திருவுள்ளம் கொண்டார். 


பொய்கையாழ்வார் செல்லும் வழியே தென்பெண்ணை ஆறு குறுக்கிட்டது.

அதைக்கண்டதும்  ஸ்ரீமந்நாராயணன் திருத்தோற்றமும் நினைவுக்கு வந்தது.


தமது பைந்தமிழ்ப் பாசுரங்களால் அனந்தனின் ஆனந்ததரிசனத்தைப் பாடிப்பாடிப் பரவசமானார்.





பரமனைப் பாடி மகிழ்ந்து மெய்மறந்து நின்றார்....


 அப்பொழுது தான் இரவாகிப் போனதே அவருக்கு நினைவு  வந்தது...

அந்நேரம் சூறைக்காறரும் மழையும் வேறு சூழ்ந்துகொண்டது.


அங்கு  பொய்கையாழ்வாரின் கண்ணில்  ஒரு ஆசிரமம் தென்பட்டது...

 மனதில் ஆர்வம் பொங்க அந்த ஆசிரமம் நோக்கி விரைந்தார்.....


அந்த வனத்தில் மிருகண்டு முனிவர் அமைத்திருந்த ஆசிரமம் அது. ..

பொய்கையாழ்வார் சென்றபோது அந்த ஆசிரமம் திறந்தே இருந்தது.

யாரும் உள்ளே இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.

பொய்கையாழ்வார் மெல்ல உள்ளே சென்றார்.

கனத்த இரவு.

 கொட்டும் மழை.

 இனிப் போக்கிடம் ஏதுமில்லை.


இந்த உள்நடையில் சாய்ந்து துயில் கொள்ளலாம் என்று எண்ணிய ஆழ்வார் கதவைத் தாழிட்டுக் கொண்டு வந்தார்.


சோர்வுயாவும் நீங்க, நெட்டி முடித்தபடி காலை நீட்டிக் கொண்டு பரந்தாமா என்று படுத்து, சற்று கண் அயர்ந்தார்.








மேலும் தரிசிக்கலாம்....




2082

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று.



2134

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,

நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம், திருமாற் கரவு.





2181

ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,

ஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,

மாயவனை யேமனத்து வை.



பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்

அனுபிரேம்...

8 comments:

  1. படித்தேன். விவரங்கள் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. பொய்கையாழ்வார் வாழியே... புகைப்படங்கள் தரிசித்தேன் நன்றி

    ReplyDelete
  3. சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்.

    நன்றி.

    ReplyDelete
  4. அனுவும் விரைவில் ஞானி ஆகிடப்போறா போல இருக்கே.. தொடர்ந்து சமயப் பதிவுகள்... இருப்பினும் அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரா...ஆன இன்னும் 3 நாட்களுக்கு பக்தி பதிவு தான்....

      நான் மட்டும் ஞானி ஆன போதாதே...அதான் அனைவருக்கும் ....

      Delete
  5. அருமையான பதிவு.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  6. சைவமும் வைணவமும் என்றும் நினைவில் கொள்ளவேண்டிய பெரியவர் - பொய்கையாழ்வார்..

    காழ்ப்புணர்ச்சி மிகுந்திருந்த அந்த காலகட்டத்தில் சிவ விஷ்ணு மூர்த்திகளின் திருமேனி அழகினை திருப்பாசுரங்களில் வடித்துத் தந்தவர் பொய்கையாழ்வார்..

    பொய்கையாழ்வார் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  7. பொய்கையாழ்வார் பற்றிய தெரியாத தகவல்கள். படங்களும், பதிவும் அருமை அனு.

    ReplyDelete