13 January 2018

திருப்பாவை 29










கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை
வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்!
பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே!
நீ! தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை.
என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.

எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும்.
உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும்
இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.




திருப்பாவை 30








அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், 
கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, 
சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து,

 பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், 
 "இனிய தமிழில் முப்பது பாடல்" பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.



சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இவ்வண்ணமே ஓதுபவர்,
 மலைபோன்ற நான்கு திருத்தோள்கள் உடையவனும்,
சிவந்த கண்கள் கொண்ட திருமுகம் உடையவனுமான செல்வத் திருமாலின் கருணையால்,
எங்கும் எவ்விடத்தும் அவன் அருளைப் பெற்று இன்புறுவர்!
என்று ஸ்ரீஆண்டாள்

மார்கழி நோன்பின் மகத்துவத்தையும் பலனையும் கூறி திருப்பாவையை நிறைவு செய்கிறார்.




ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....











ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்...!

அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. நாளும் நாளும் திருப்பாசுரங்களை பதிவினில் வழங்கி
    மார்கழியைச் சிறப்பித்தீர்கள்.. மகிழ்ச்சி..

    வாழ்க நலம்..

    ReplyDelete