28 February 2018
26 February 2018
22 February 2018
ஆயிரம் தடா வெண்ணெய், தேரழுந்தூர் ...
முந்தைய பதிவில் திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் கருட சேவையை தரிசித்தோம்...
இன்று திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் ஆயிரம் தடா வெண்ணெய் படைத்து சிறப்பித்த படங்கள்......
தல பெருமை
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.
21 February 2018
உலக தாய்மொழி தினம்
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. எனவே அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.
20 February 2018
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கருடசேவை
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்.. மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தேரழுந்தூரில் அமைந்துள்ள இக்கோவில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.
சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.
மூலவர்: தேவாதிராஜன்
உற்சவர்: ஆமருவியப்பன்
தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: தர்சன புஷ்கரிணி, காவிரி
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
16 February 2018
சீனப் புத்தாண்டு..
இன்று சீனப் புத்தாண்டு ....அதைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...
![]() |
மதிமான நாள்காட்டியின் (Lunar Calender) அடிப்படையில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
கமாரி என்று அழைக்கப்படும் இந்தச் சீன நாள்காட்டி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இந்த நாள்காட்டி முறையைச் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் சீ உவாங் தி (Shi Huang Ti) என்பவர்.
இந்த நாள்காட்டி 5 சுற்றுகள் அடங்கிய மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்டது (5X12=60).
11 February 2018
09 February 2018
05 February 2018
04 February 2018
02 February 2018
திருமழிசையாழ்வார்
இன்று (2.2.2018) திருமழிசையாழ்வார் அவதார தினம் .....
தையில் மகம்........
திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!
அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே !
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே!
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே!
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே!
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே!
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே!
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே!
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே!
Subscribe to:
Posts (Atom)
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...