தொடர்ந்து வாசிப்பவர்கள்

09 August 2018

வல்வில் ஓரி விழா 2௦18வாழ்க வளமுடன்


வல்வில் ஓரி விழா 2௦18

செம்மேடு,கொல்லி மலை,நாமக்கல்.


ஆண்டுதோறும்  ஆடி மாதம் 18 ஆம் தேதி சேரமன்னன் வல்வில் ஓரியின் நினைவாக  வில்வித்தைப் போட்டி  செம்மேடு,கொல்லி மலையில்  நடைப்பெறுகிறது.....போன ஆண்டின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அங்கு நடைபெற்ற போட்டியின் சிறப்பு பார்வை இங்கு...

வல்வில் ஓரி 


கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவர் வல்வில் ஓரி.

கடையேழு வள்ளல்களில் ஒருவர்.

ஓரி என்பதற்கு தேனின் முதிர்ந்த நிறம் என்று பெயர்.

இந்த நிறமுடைய குதிரையை இவர் பெற்று இருந்ததால் இவருக்கு ஓரி என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது.

இவருடைய இயற்பெயர் ஆதன்.


ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை ‘வல்வில்’ என்று அழைப்பார்கள்.

ஒரே அம்பில் யானை, புலியின் வாய், புள்ளிமானின் உடல், காட்டுப் பன்றி, உடும்பின் தலை ஆகியவற்றை துளையிட்டு, 5 விலங்கினங்களைக் கொன்றார் என்ற சிறப்பே வல்வில் ஓரி என்ற பெயர் நிலைக்க காரணமாயிற்று.


இந்த நிகழ்விற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மேலும் மற்ற மாநிலங்களிலிருந்தும் பலர் பங்கு பெற்றிருந்தனர்....


இந்நிகழ்வு இருநாட்கள் நடைபெறும்...

முதல் நாளில் தேர்வானவர்கள் ....இரண்டாம் நாளின் சுற்றில் பங்குபெறுவர்....

இதில் குறி இலக்கிற்கான தொலைவு சுமார் 18 மீ ...

யானை, புலியின் வாய், புள்ளிமானின் உடல், காட்டுப் பன்றி, உடும்பின் தலை இவைகள் தான் குறி இலக்குகள்..

இந்த போட்டி


 10 வயதிற்கு உட்பட்டவர்கள்,

14 வயதிற்கு உட்பட்டவர்கள்,

17 வயதிற்கு உட்பட்டவர்கள்,

19 வயதிற்கு உட்பட்டவர்கள்,

19 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள்  என ஐந்து பிரிவுகளாக நடத்தப்படுகிறது....


குறி இலக்கை சரியாக அடித்தல், காயம் பண்ணுதல் என்னும் அடிப்படையில்  புள்ளிகள் வழங்கப்பட்டு ....வெற்றி வீரர்கள் தேர்வு செய்யபடுகின்றனர்....

வெற்றிக் கோப்பைகள்..
அனைவருக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வு இந்த விழா...


அதனை இங்கு பகிர்வதில் நானும் மிக பெருமைக் கொள்கிறேன்,...
அன்புடன்
அனுபிரேம்13 comments:

 1. அறியாத விழா அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. நாளிதழ்களில் படித்துள்ளேன். இப்போது நேரில் பார்த்த உணர்வு. நன்றி.

  ReplyDelete
 3. இது வரை கேள்விப்பட்டது இல்லை.. அறிய தந்தமைக்கு நன்றி அனு

  ReplyDelete
 4. என் கணவரின் அண்ணன் மகள் வில்வித்தை பயின்று கொண்டு இருக்கிறாள். புத்துணர்ச்சி விழா படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஆம் போன வருடம் கூறினீர்கள்...எங்கு சென்னையிலா

   Delete
 5. இந்த விழா பற்றி ஏற்கெனவே சென்ற வருடங்களில் உங்கள் பதிவில் எழுதி இருந்தீர்களோ....

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஸ்ரீராம் சார்..போன வருடமும் பகிர்ந்தேன்...

   Delete
 6. நல்ல பகிர்வு. படங்கள் அழகு.

  ReplyDelete