22 August 2018

கருப்பு உளுந்து வடை


வாழ்க வளமுடன்...

இன்றைய பதிவில் பெருமாள் வடை (கருப்பு உளுந்து வடை)









தேவையானவை


உளுந்தம் பருப்பு  - 1 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு

எண்ணெய்








செய்முறை :

 உளுந்தம் பருப்பை சிறிது நீர் விட்டு   ஊற வைக்கவும்.


 மிக்ஸியில் , தண்ணீர் எதுவும் சேர்க்காமல், உளுந்தை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.



பின்  அத்துடன் பொடித்த  சீரகம் , மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , வடையை  தட்டி போட்டு , நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.




பெருமாள் வடை (கருப்பு உளுந்து வடை) ரெடி...






இதில் கொஞ்சம் கசப்பு சுவை இருப்பதால் பசங்க ரொம்ப விரும்பலை ...ஆனால் எங்களுக்கு பிடித்து இருந்தது...

வேண்டுமானால் இதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவும் சேர்க்கலாம்..



அன்புடன்

அனுபிரேம்





12 comments:

  1. உளுந்தோடு சமைப்பது உடலுக்கு ஆரோக்கியம்ப்பா. அதிகமா ஊற வைக்காம அரைச்சு வடை சுட்டெடுத்தா மொறுமொறுன்னு கோவில் வடை சுவை வரும்ப்பா

    ReplyDelete
  2. கருப்பு உளுந்தில் மொறு மொறு வடை. பார்க்கவே நன்றாக இருக்கிறது. இங்கே கருப்பு உளுந்து கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. கிடைத்தால் செஞ்சு பாருங்க வெங்கட் சார்

      Delete
  3. உளுந்துல இரும்புச்சத்து இருக்குன்னு சொல்வாங்க... அதற்காகவாவது சாப்பிடணும்... கிடைக்க மாட்டேங்குதே!

    ReplyDelete
    Replies
    1. அடாடா ..தேடி பாருங்க கிடைக்கும்..

      Delete
  4. நானும் அப்பப்ப இதிலும் சுடுவதுண்டு, ஆனா வெங்காயம் மிளகாய் சேர்ப்பேன்ன். க.உளுந்தில் இட்லி செய்தேன், அதுவும் சுவையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நான் வெங்காயம் சேர்க்கலை அதிரா அது சாதாரண உளுந்த வடைக்கு சேர்ப்போம்...

      ஒ இட்லி செஞ்சீங்களா சூப்பர்..

      Delete
  5. கருப்பு உளுந்து கிடைக்க மாட்டேங்குதா ஏன்?
    எல்லா கடையில் உடைத்த கருப்பு உளுந்தும் கிடைக்குது, முழு கருப்பு உளுந்தும் கிடைக்குதே!

    வடை சூப்பராக இருக்கிறது. மிளகு, சீரகத்தை அப்படியே முழுதாய் போட்டால் கசப்பு சுவை இருக்காது அனு.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை மிளகு, சீரகத்தை அப்படியே முழுதாய் போட்டு பார்க்குறேன் மா..

      Delete