திருவண்பரிசாரம் /திருப்பதிசாரம்
மூலவர்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன்
தாயார்: கமலவல்லி நாச்சியார்
உற்சவர்: திருவாழ்மார்பன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: இந்திர கல்யாண விமானம்
தீர்த்தம்: லக்ஷ்மீ தீர்த்தம்
![]() |
பரமபத நாதனாம் இறைவன் நாராயணன் மீது பக்தி கொண்ட சப்தரிஷிகள் என்று போற்றப்படும், ஏழு முனிவர்களும் இறைவனைக் காண வேண்டி சுசீந்திரம் என்ற இடத்தில் தவமியற்றினர்.
சுசீந்திரம் அப்போது ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. இறைவன் அவர்களுக்கு சிவன் வடிவில் காட்சி தந்தார்.
முனிவர்கள் தங்களது பெருமாளின் திருவுருத்தைக் காண வேண்டும் என்று கேட்க பெருமாள் "சோம தீர்த்தக் கட்டம்" என்ற இடத்தில் தவமியற்றினால் தான் அவ்வுருவில் காட்சி தருவதாகச் சொன்னார்.
அதைக் கேட்டதும் சப்தரிஷிகள், சோம தீர்த்தக் கரையான இத்தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து நீண்ட நாட்களாக தவமியற்றினர்.
அவர்களது தவத்திற்கு மனமிறங்கிய இறைவன் திருமாலின் வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருளினார்.
அந்த உருவத்திலேயே இந்த திருத்தலத்தில் தங்கி அருள்புரிய வேண்டும் என்று முனிவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்ட பெருமாள், முனிவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற ""திருமால், சப்த ரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக அமர்ந்து அருள்புரிகிறார்".
அக்காட்சியையே இன்றளவில் நாம் தரிசிப்பதாகத் தலவரலாறு கூறுகிறது.
தர்மங்கள் தலை சாய்ந்து அதர்ம சக்திகள் தலை விரித்தாடும் போது நல்லவர்களை காக்க தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுத்தார்.
அவர் எடுத்த தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று.
தனது பக்தன் பிரகலாதனுக்கு அவன் தந்தை இரணியனால் இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளை சகிக்க முடியாமல் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை சம்ஹாரம் செய்தார்.
அதன்பிறகும் பரந்தாமனின் கோபாவேசம் அடங்கவில்லை.
மிகவும் உக்ரமாக இருந்தார். இதைக்கண்டு லட்சுமி திருமாலை விட்டு பிரிந்து இயற்கை எழில் சூழ்ந்த திருப்பதி சாரத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார்.
பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்தமடைந்த பகவான் லட்சுமியை தேடி அவள் இருப்பிடத்திற்கு வந்தார்.
லட்சுமி ஆனந்தமடைந்து பகவானின் திருமார்பில் நித்யவாசம் செய்ததாகவும், அதனால் பகவானுக்கு ‘திருவாழ்மார்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் ஊருக்கு திருப்பதிசாரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஐதீகம்.
மூலவர் தரிசனம் :-
மூலவரின் ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்" என்ற கலவையினால் செய்யப்பட்டது.
கல்லும், சுண்ணாம்பும் செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு "கடுசர்க்கரை யோகம்" என்பது பெயர்.
இதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள தாயாருக்குத் தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம்.
பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார்.
இந்த மூலவர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
நம்மாழ்வார் ஒரு பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
குலசேகர ஆழ்வார் சேவித்து கைங்கரியம் செய்த திருத்தலம்.
கோவிலுக்கு வெளியே வந்தால் எதிரே சோமதீர்த்தம்.
திவ்ய ஸ்தலம்...மிக அமைதியான மனதிற்கு நிறைவு தரும் இடம்...
மிக அழகிய குளக்கரை...
திருவாழ்மார்பனை கண்டு தரிசித்த பின் ....மன நிறைவுடன் மிக மகிழ்வான மனதுடன் எங்கள் ஊர் திரும்பினோம்...
மூன்று நாள் பயணத்தில் முடிந்த அளவு அனைத்து இடங்களையும் , நின்று நிதானித்து கண்டு ரசித்தோம் ...
அதனை படங்களுடன் இங்கும் பகிர்ந்தேன் ....நீங்களும் மகிழ்ந்து இருப்பீர்கள் என நினைக்கிறன்...
தொடர்ந்து ரசித்து வந்ததற்கு அனைவருக்கும் மிகவும் நன்றி...
ஒரு சில அழகிய படங்கள் மட்டும் அடுத்த பதிவுகளில் வரும்...
11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி
12.கரையோரம்..
13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி படகுத்துறை...
14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1
15. மாத்தூர் தொட்டிப் பாலம் 2
16. விவேகானந்தர் பாறை
17.திருவள்ளுவர் சிலை
18. அருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்
19. நாகர்கோவில்..
20.ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் , ஜடாயுபுரம், திருப்பதிசாரம்
21.சுவாமி நம்மாழ்வார் பிறந்ததலம்
நன்றிகள் பல...
இதுவரை பார்க்காத கோயிலுக்கு இப்பதிவு மூலம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் கோயிலுக்குச் செல்வேன்.
ReplyDeleteதிருவண்பரிசாரம் /திருப்பதிசாரம் தரிசனம் கிடைத்தது.
ReplyDeleteபடங்கல் எல்லாம் மிக அழகு.
இரண்டாவது படம் மிக அழகு. சூரியனும், கோயிலும் அழகு.