வாழ்க நலம்...
திற்பரப்பு படகுத்துறை பார்த்து விட்டு அடுத்து நாங்கள் சென்றது மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு...
![]() |
மாத்தூர் தொட்டிப் பாலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.
மாத்தூர் என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் , கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் , நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமாகவும் காணப்படுகிறது.
பாலத்திலே உள்ள தொட்டி...
இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.
இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28தூண்கள் உள்ளன.
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.
இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது.
இங்கிருந்து பார்க்கும் போது ..ஆஹா கண் கொள்ளாகாட்சிகள்...
இதில் கையை நீட்டி படம் எடுக்கவும் பயம் போன் விழுந்துவிட்டால்...
அதனால் இந்த படம் எல்லாம் கணவர் எடுத்தது தான்...
அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.
மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.
11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி
12.கரையோரம்..
13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி படகுத்துறை...
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்...
கண் கொள்ளாகாட்சிகள் தான் இயற்கை அழகு மனதை அள்ளுகிறது.
ReplyDeleteதொட்டிப்பாலம் போனது இல்லை .
இயற்கை அழகு நிறைந்த இடம். கதாநாயகனோ, கதாநாயகியோ அறிமுகக் காட்சியில் ஊருக்குள் நுழையும் முன்பு பாடலுடன் அறிமுகமாவார்களே... அதற்குப் பொருத்தமான இடம்!
ReplyDeleteஸ்ரீராம் இந்தத் தொட்டிப்பாலம் பல படங்களில் வந்துள்ளது. கார்த்தி நடித்த படம் வருஷம் 16? அதில் கூட வந்திருந்த நினைவு...முழுப்படமும் பார்த்ததில்லை...
Deleteகீதா
பாலத்திலிருந்து படங்கள்.. சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteவா..வ் அழகா இருக்கு. படங்கள் சூப்பர்.
ReplyDeleteகாண விரும்பும் இடம். இன்னும் வாய்ப்பு வரவில்லை. சுற்றிவர இயற்கை எழில் கொஞ்சுகிறது.
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள். பல வருடங்கள் ஆயிற்று...மீண்டும் நினைவில்
ReplyDeleteதுளசிதரன்
ஹையோ அனு எனக்கும் என் மகனுக்கும் மிகவும் மிகவும் பிடித்த இடம். அடிக்கச் செல்வோம் நானும் அவனும் மட்டும் கூட....மேலிருந்து கீழே நதியைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்...அதுவும் மழைக்காலத்தில்...சுற்றிலும் மலை ஹையோ செம...சீன்...எத்தனை வருடங்கள் ஆயிற்று...எங்கள் ஊர் சென்று...பழைய நினைவுகளை மீட்டி விட்டீங்க...
கீதா
அழகான இடம். அத்தனை உயரத்தில் பாலத்திலிருந்து படம் எடுத்தால் - வாவ் இயற்கை எழில் கொஞ்சும் இடமாயிற்றே - காமிராக் கண்களுக்கு விருந்து தான்!
ReplyDeleteதொடர்கிறேன்.