தொடர்ந்து வாசிப்பவர்கள்

06 July 2018

பாலத்தின் கீழிருந்து...மாத்தூர் தொட்டிப் பாலம்

வாழ்க நலம்..


முந்தைய பதிவில் மாத்தூர் தொட்டிப் பாலத்திலிருந்து கீழே பார்த்தோம் இன்று கீழிருந்து மேலே காணலாம்....

ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன.
வந்த பாதையினாலே அதாவது தொட்டிப் பாலத்தின் மேற் பகுதியிலேயே திரும்பி வரலாம்.

அல்லது, பாலத்தின் அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம்.

பாலம் முடிவடையுமிடத்திலே தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.
சூழல் படிக்கட்டு பாதை..


உயரமா பாலம்...

இந்தப் பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

 ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன. அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும்.

அவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.

மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன் பெறத் தொடங்கின. தரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின. கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது.


பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு.

அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் .

 பாலத்தைப் பார்வையிட, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.


இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் இடம்....


11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி

12.கரையோரம்..

13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி  படகுத்துறை...

14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1தொடரும்...அன்புடன்
அனுபிரேம்...

6 comments:

 1. இயற்கை எழில் கொஞ்சும் இடம்தான்.
  பார்க்க தூண்டுகிறது அழகான படங்கள்.

  ReplyDelete
 2. அனு முன்பு எல்லாம் இப்படியான ஒட்டகச் சிவிங்கி, யானை சிலைகள் பார்க், நிறைய படிகள் எதுவும் இருக்காது. நிறைய புதிதாகக் கட்டப்பட்டுள்ளது தெரிகிறது. எனக்குத் தெரிந்து 17, 18 வருடங்கள் முன்பு வரை தொட்டிப்பாலம், மற்றும் ஆறு சுற்றிலும் ரப்பர் தோட்டம்,. காடு மலை இவ்வள்வுதான். இப்போது நிறைய வந்துள்ளது போல் இருக்கும். சுற்றுலாத்தலம் என்றாகி இருப்பதால்...இருக்கலாம்....என்றாலும் அருமையான இடம்..

  கீதா

  ReplyDelete
 3. வா..வ் சூப்பரான இடம் அனு. தென்னை,வாழை பார்த்தால் ஊர் ஞாபகம் வரும்.

  ReplyDelete
 4. மாத்தூர் தொட்டிப் பாலம் - அழகான இடம். படங்களும் இயற்கைச் சூழலும் சிறப்பு.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 5. படங்களும் பகிர்வும் நன்று. கீழிருந்து பார்க்கும் போது பாலத்தின் உயரம் இன்னும் பிரமிப்பாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 6. மாத்தூர் தொட்டிப்பாலம் படங்களும் பதிவும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன.

  ReplyDelete