வாழ்க வளமுடன்
அடுத்து நாங்கள் சென்றது நாகர்கோவில் அருகில் இருக்கும் திருப்பதிசாரத்திற்கு ... “திருவாழ்மார்பனை” காண...
அங்கும் அதே நிலை நடைதிறப்பு மாலை 5 மணிக்கு தான்...
அதனால் அங்குள்ள குளக்கரையில் அமர்ந்தோம்..அப்பொழுது ஒரு பெரியவர் சைக்கிளில் வந்தார் ..அவர் சொன்னார் அதோ அந்த பக்கமா ஒரு 1 கி. மீ மேல நடந்தா ஒரு பிள்ளையார் கோவில் வரும் அங்க உட்கார நல்லா இருக்கும் வேணுன்னா அங்க போங்களேன்ன்னு சொல்லி சென்றார்...
சரி போய் தான் பார்ப்போம் ன்னு ...நடக்க ஆரம்பித்தோம்...
பக்கத்திலே ஆறு ஓடுகிறது..மதிய நேரம் சில பேர் வந்து குளிக்கவும் செய்றாங்க..பசங்களும் இறங்கியாச்சு அங்கு குளிக்க...
அங்கு அர மரத்தடியில் அரசடி ஆதிவிநாயகர் இருக்கார்...இவரின் சிறப்பு ... ஒன்றை ஒன்று பின்னி தழுவிய நிலையில் அரசமரமும், வேம்பும் வளர்ந்து நிற்கும் மரநிழலில் அமைந்து இருப்பது.
இவ் விநாயகர் கேரள அரச குடும்பத்தால் வழிபாடு செய்யப்பட்டவராம்..
3 மணிக்கு வந்த குருக்கள் எங்களுடன் பேசிய படியே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்...
பக்கத்திலே ஒரு கோவில் அதுவும் நடை சாத்தியே...
ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் இராமலிங்க ஸ்வாமி சிவாலயம்
![]() |
இராவணன், சீதையை கடத்தி செல்லும் போது, தடுத்து நிறுத்தி, சீதையை காப்பாற்ற ராவணனை தாக்கியது ஜடாயு.
இதனால், கோபமுற்ற இராவணன், சிவனிடம் தவமிருந்து பெற்ற குறி தவறாமல் தாக்கும் சந்திரகாசம் என்னும் தானுடைய நீண்ட இந்திரனின் வஜ்ராயுதிர்கு நிகரான கூறிய வாளை எடுத்து ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான்.
இராமன் சீதையை தேடி வரும்போது, அங்கு, நடந்தவைகளை சொல்லி இறந்து விடுகிறது ஜடாயு.
அப்படி இறக்கை வெட்டப்பட்டு ஜடாயு வீழ்ந்த இடம் தான் இந்த ஜடாயுபுரம்.
ஜடாயுவிற்கு மோட்சம் வேண்டி இராமபிரான் லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் மற்றும் ஜடாயுவினுடைய சமாதி இருந்த இடம்தான் மூலஸ்தானமாம்.
மூலவர் பெயர் - ஜடாயுபுரீஸ்வரர்,
தாயார் பெயர் - சிவகாமி அம்பாள்,
இவை எல்லாம் ராஜிக்காவின் தளத்தில் கிடைத்த தகவல்கள்...
மேலும் கோவிலின் உள் பிரகாரம் காண வேண்டும் என்றால் இங்கு ராஜிக்கா தளத்தில் சென்று பாருங்கள் ...ஜடாயுபுரம் இராமலிங்க சுவாமி திருக்கோவில் - புண்ணியம் தேடி ஒரு பயணம்
....
இந்த சிவாலயமும் 5 மணிக்கு மேல் தான் திறப்பு என்பதால் விநாயகரை மட்டும் வணங்கி விட்டு... அங்கு குருக்கள் கொடுத்த லட்டு பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு....
மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்...பெருமாளை காண
11.திற்பரப்பு நீர்வீழ்ச்சி
12.கரையோரம்..
13. திற்பரப்பு நீர்வீழ்ச்சி படகுத்துறை...
14.மாத்தூர் தொட்டிப் பாலம் 1
15. மாத்தூர் தொட்டிப் பாலம் 2
16. விவேகானந்தர் பாறை
17.திருவள்ளுவர் சிலை
18. அருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்
19. நாகர்கோவில்..
தொடரும்...
அழகான புகைப்பட தொகுப்பு. இயற்கை நிறைந்த சூழலில் இறைவனை வணங்குவது சிறப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
நன்றி சகோ
Deleteஎன் வலைப்பூவுக்கு சத்தமில்லாம ஒரு விளம்பரமாச்சு. நாகர்கோவில் கடவுளின் தேசம். எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்
ReplyDeleteராஜி ரொம்ப தாங்கஸ் ராஜி எங்க ஊரைப் பிடிச்சதுனு சொன்னதுக்கு. இப்பக் கூட எனக்கு படங்களைப் பார்த்ததும் ஊருக்குச் சென்று இருந்துவிட மாட்டோமானு தோணுது. இயற்கையுடன் ஒன்றிய ஊர்...மழை இரு பருவங்களிலும் கிடைக்கும். அருமையான ஊர்...
Deleteகீதா
ரொம்ப மகிழ்ச்சி அக்கா
Deleteஅருமையான தென்ஞ்சோலை மிக அழகு.
ReplyDeleteபிள்ளையார்கோயில், ஜடாயுபுரீஸ்வரர்ஆலயம் எல்லாம் பார்க்க அழகு அமைதியான இடம். பக்கத்தில் ஆறு சூப்பர்.
நன்றி மா
Deleteஅருமையான, பசுமையான இடம் என்று தெரிகிறது. இது நம்ம கீதா ரெங்கன் ஊர் இல்லை?
ReplyDeleteயெஸ் யெஸ் ஸ்ரீராம்...அதே அதே..நான் பிறந்து தவழ்ந்து இடையில் கொஞ்சம் கொஞ்சம் வேறு ஊர் சென்று என்றாலும் 7 ஆம் வகுப்பிலிருந்து கல்யாணம் ஆகும் வரை இதே ஊர்தான்...ஹையோ எங்க ஊரைப் பார்த்தீங்கனா உங்களுக்கு வேறு ஊர் செல்லப் பிடிக்காது சுற்றி தண்ணீர் தோட்டம்...என்று கோயில் அருமையா இருக்கும் ஸ்ரீராம் ஒரு முறையாவது போய் பார்த்துட்டு வாங்க
Deleteஅனு எங்க ஊர்ல இருந்தப்பதான் நான் அவங்களை ஏதேச்சையா கூப்ப்பிட்டேன். எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். உடனே ஃபோட்டோஸ் அனுப்பினாங்க பாருங்க....நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். சும்மாவா இந்த ஆற்றில் குளித்து...ஹையோ என்ன ஒரு பசுமையான நாட்கள்...
கீதா
ஆஹா.... கிராமிய சூழலில் ஒரு கோவில். பார்க்கவே நல்லா இருக்கு.
ReplyDeleteபடங்கள் அழகு.
அனு அப்படியே லயித்துவிட்டேன்...நான் நீச்சலிடித்து விளையாடிய ஆறு. நினைத்தால் வீட்டிலிருந்து எல்லோரும் ஜடாயுபுரம் சென்று இனிய பொழுதுகள். 10 நிமிடம் கூட நடக்க வேண்டாம். அத்தனை அழகான ஊர் எங்கள் ஊர். இதோ இந்தக் கோயில் அருகில் தான் கோயிலின் அந்தப் பக்கம் ஆற்று மணலில் எங்கள் ஊரே திரண்டு உட்கார்ந்து இருப்போம் எப்போது என்றால் கனுப்பொங்கல் அன்றும், ஆடிப் பெருக்கு அன்றும் ஒவ்வொருவர் வீட்டுக் கலந்த சாதம் எக்சேஞ்ச் மேளா நடக்கும்....ஹையோ கல்யாணம் ஆகும் வரை திருவண்பரிசாரம், ஜடாயுபுரம் மகிழ்ச்சியான நாட்கள். எங்கள் ஊர் ஆற்றங்கரை இப்போது சற்று ஓட்டம் மாறியுள்ளது போல இருக்கு...அப்போதெல்லாம் தெளிந்து இருக்கும். மழையினால் இருக்கலாம். எங்கள் ஊரில் இம்முறையும் ஒரு நாள் கிராமம் முழுவதும் தண்ணீர் வந்தது என்று கேள்விப்பட்டேன்.
ReplyDeleteகீதாவின் ஊர் என்று போட்டிருக்கலாமே ஸ்ரீராம் அதிரா கோமதிக்கா ஏஞ்சல் எல்லாரும் எங்க ஊர் பார்த்து பொறாமைப்பட!!! ஹா ஹா ஹா ஹா ஹா
கீதா
அடுத்து உங்களுக்கு காக ஸ்பெஷல் பதிவு கீதா க்கா...
Deleteஅனு அடுத்த முறை போனீங்கனா முன்னரே சொல்லுங்க. திருப்பதிசாரத்தில் பஸ் போகும் ரூட்டில் அந்த ஒரு பெரிய வாய்க்கால் ஓடுமே ஒரு புறம் அந்த வாய்க்கால் போகும் வழியில்நடந்தால் பீமனகரி நு ஒரு சின்ன 7,8 வீடுகள் கொண்ட ஊர் வரும் அங்க ஒரு அம்மன் கோயில் பீமநகரி அம்மன் கோயில் செமையா இருக்கும்....அடுத்த முறை போய்வாங்க. வாய்க்காலைக் கடக்கும் இடம் ரொம்ப அழகா இருக்கும் அந்த இடத்துல தமிழ்நாடு வேளாண்மை மண் சோதனை மையம் இருக்கு.
ReplyDeleteதிருப்பதிசாரம் ஊருக்குள் நுழையும் போது வலப்புறம் அந்தக் காலத்து ராஜா வாழ்ந்த குட்டி அரண்மனை உண்டு அது தமிழ்நாடு வேளாண்மை ஆஃபீஸாக இருந்தது இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன்...
கீதா
நிச்சியம் சொல்றேன் க்கா...
Deleteஇது கடைசி நேர முடிவு க்கா அதான் முன்னமே உங்களுக்கு சொல்ல முடில..
வணக்கம் சகோதரி
ReplyDeleteமிக அழகான இடங்கள். இயற்கையின் அசத்தலான அழகுக்கு ஈடு இணையேது. அழகான தென்னைமரங்களும், ஆற்றங்கரையில், அரசமரத்தடி விநாயகரும், கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள். இன்னமும் நாகர் கோவிலில் தாங்கள் கண்டு மகிழ்ந்து பகிரும் பதிவுகளை காண ஆவலாயிருக்கிறேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. பாரதியின் பாட்டு மிக அருமை. பாடி அகமகிழ்ந்தேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.