இன்று (13.8.2018) ஆண்டாள் அவதாரம் திருநட்சத்திரம் .....
(ஆடிப்பூரம்) ........
ஆண்டாள் வாழித்திருநாமம்
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!
ஏழாம் நூற்றாண்டு,
நள ஆண்டு,
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை,
பூரம் நட்சத்திரம்,
சுக்லபட்சம் பஞ்சமி திதியில் தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்
(ஆடிப்பூரம்) ........
ஆண்டாள் வாழித்திருநாமம்
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!
![]() |
திருவல்லிக்கேணி ஸ்ரீ கோதை நாச்சியார் |
நள ஆண்டு,
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை,
பூரம் நட்சத்திரம்,
சுக்லபட்சம் பஞ்சமி திதியில் தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்
![]() |
ஸ்ரீவில்லிபுத்தூர் |
![]() |
ஸ்ரீவில்லிபுத்தூர் |
![]() |
ஸ்ரீவில்லிபுத்தூர் |
![]() |
திருக்கச்சி ஸ்ரீ கோதை நாச்சியார். |
(504)
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.
![]() |
திருக்கடிகை கோதை நாச்சியார் |
![]() |
திருக்கோவிலூர் சன்னதி |
![]() |
திருநீர்மலை |
![]() |
திருப்பதி கோவிந்தன் சன்னதி |
(505)
வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில்
புகவென்னை யெய்கிற்றியே
![]() |
திருப்பதி |
![]() |
திருவரங்கம் |
![]() |
திருவல்லிக்கேணி |
![]() |
திருவல்லிக்கேணி |
(506)
மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே
![]() |
ஸ்ரீ தேவாதிராஜன் சன்னதி ஆண்டாள் |
![]() |
ஸ்ரீவில்லிபுத்தூர் |
![]() |
ஸ்ரீவில்லிபுத்தூர் |
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்,நீதியால்
நல்லபத்தர் வாழுமூர், நான்மறைகளோதுமூர்,
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
சோதி மணிமாடம் தோன்றுமூர்,நீதியால்
நல்லபத்தர் வாழுமூர், நான்மறைகளோதுமூர்,
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
படங்கள் அத்தனையும் அருமைப்பா
ReplyDeleteஅழகிய ஆண்டாள் தொகுப்பு. ஆடிப்பூர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆண்டாள் தரிசனம் அழகிய படங்களில்..
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteஅருமையான படங்கள். நல்லதொரு தொகுப்பு.
ReplyDeleteஅழகான படங்கள் தொகுப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete