26 September 2019

வேர்க்கடலை பேரீச்சம்பழ உருண்டை

வாழ்க வளமுடன் 




வேர்க்கடலை பேரீச்சம்பழ உருண்டை இன்றைய சுவையான பதிவில் ...

தேவையானவை

பேரீச்சம் பழம் - 2  கப்

வேர்க்கடலை  - 1  கப்

முந்திரி - 15

பாதாம் - 15

நெய் - 3 ஸ்பூன்



செய்முறை 

கடலையை வறுத்து தோல் உறித்து, மிக்ஸ் யில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும் .






முந்திரி , பாதாமை சிறிதாக நறுக்கி ..பின்  நெய்யில் வதக்க வேண்டும் ....




 பேரீச்சம் பழத்தை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, இதை தனியாக மிக்ஸ்யில் அரைத்துக் கொள்ள வேண்டும் .

பின் கடாயில் நெய் சேர்த்து அரைத்த பேரீச்சம் பழ விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.








 பின் அதில் பொடித்த கடலை , வறுத்த முந்திரி,  பாதம்  மற்றும் நெய் சேர்த்துக் கிளற வேண்டும்.


இந்த கலவை நன்கு சுருண்டு வரும் போது , அடுப்பை அணைத்து சிறிது கை பொறுக்கும் சுடு இருக்கும் போதே  உருண்டையாக பிடிக்க...   வேர்க்கடலை பேரீச்சம்பழ உருண்டைகள்  தயார்.





ஆனால் அதை விட இது இன்னும் சுவை .





அன்புடன்
அனுபிரேம்



13 comments:

  1. முந்திரி பாதாம் இவையெல்லாம் போட்டு ரிச்சாகப் பண்ணும்போது, பேசாம அவைகளையே சிறிது கரகரப்பாக அரைத்திருக்கலாம், வேர்க்கடலைக்குப் பதிலாக. அது இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. முந்திரி பாதாம் அளவுகள் குறைவு ...வேர்க்கடலை அதிகம் சேர்க்கணும் ன்னு தான் இப்படி செய்தேன்

      Delete
  2. வணக்கம் சகோதரி

    சுவையான பதிவு. படங்களும், செய்முறைகளும் அழகாக இருப்பதோடு மட்டுமின்றி, செய்து பார்க்கவும் தூண்டுகிறது. வெறும் கடலை உருண்டை வெல்லம் சேர்த்து முழுதாகவும், பொடித்தும் செய்வதை விட இது மிகவும் ருசியாக இருக்குமென தோன்றுகிறது. அனைத்துமே உடல் நலத்திற்கு, வளர்ச்சிக்கு நல்லது. தனித்தனியே இவற்றை சாப்பிடுவதை விட இந்த மாதிரி செய்து கொடுத்தால், குழந்தைகள் ஆர்வமுடன் விரும்பி சாப்பிடுவார்கள். நானும் இதுபோல் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பாருங்க கா..

      என்ன எங்க வீட்டில் எனக்கும் அவருக்கும் ரொம்ப பிடிச்சது ...பசங்க சாப்பிட்டாங்க ஆன ரொம்ப விரும்பி கேக்கலை

      Delete
  3. சூப்பரா இருக்குப்பா இந்த நட்ஸ் உருண்டை .நீரில் ஊற வைப்பதால் எத்தனை நாள் வைக்கலாம் ?  இதை தட்டில் பரத்தி அல்வா போலவும் வெட்டி செய்யலாம்னு நினைக்கிறேன் ,செய்து பார்க்கிறேன் எங்க வீட்டு இனிப்பு விரும்பிக்காக :)

    ReplyDelete
    Replies
    1. நல்லா வதக்குவதால் சில நாள் நல்லா இருக்கும் ...ஆனாலும் சரியா எவ்வொலோ நாள் ன்னு தெரில அஞ்சு ..

      எனக்கு அதுக்குள்ள தீர்ந்து போச்

      Delete
  4. நல்ல சத்துள்ள உருண்டை. சூப்பரா இருக்கு. நானும் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பாருங்க அம்மு

      Delete
  5. ஏற்கனவே ஒரு முறை பேரீச்சம்பழ சத்து உருண்டைகள் பதிவு செய்துள்ளேன் , ஆனால் அதில் செய்முறை வேறு அது எளிதும் கூட ...//

    நான் நினைத்தேன் முன்பே உங்கள் பதிவில் பார்த்த மாதிரி இருக்கே என்று.
    செய்முறை வேறு.
    நான் அத்தி பழம், பேரீச்சை, வால்நட், பாதாம் , பிஸ்தா மட்டும் போட்டு பொடி செய்து உருட்டி விடுவேன்.
    இந்த மாதிரி செய்தது இல்லை.
    இப்படி செய்து குழந்தைகள் வரும் போது கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே இந்த தலைப்பில் போட்டதால் தான் குறிப்புக் கொடுத்தேன் மா ..


      கண்டிப்பா செஞ்சு பாருங்க மா,...இனிப்பு சாப்பிடனும் ன்னு தோணும் போது வாய்க்கு நல்லா இருக்கும்

      Delete
  6. சத்துதான்.  ஆனாலும் பேரீச்சம்பழம் இல்லாவிட்டால் சாப்பிடுவேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இதுக்கு முக்கியமே அதானே ...

      Delete
  7. ஆஹா... சுவையான குறிப்பு... சுலபமும் கூட... செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete