26 November 2019

தக்காளி தொக்கு



வாழ்க வளமுடன் 






எனக்கு புதுசா இருந்ததால் சமைத்து பார்த்தேன் ...மிக அருமையாக வந்தது ...நன்றி கீதா மா ..


தேவையானவை -


  தக்காளி - 8
 புளி  -  சிறிது
 மிளகாய் வற்றல் - 7 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )

 நல்லெண்ணெய்  - 4 ஸ்பூன்

 தாளிக்க  -  கடுகு , உளுத்தம்பருப்பு
 பெருங்காயம்
  உப்பு 


செய்முறை - 

ஒரு  ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி முதலில் பெருங்காயத்தைப் பொரிக்க வேண்டும் . பின்  அதில்  மிளகாய் வற்றலைக் கருகாமல் வறுக்க வேண்டும். 

அவற்றை தனியாக வைத்துவிட்டு  அதே எண்ணெயிலேயே    தக்காளியை  வதக்கவும்.







பின்  மிக்சியில்   மிளகாய் வற்றல், புளி, உப்பு, பெருங்காயம் போட்டு பொடிக்கவும். பின் அதிலையே வதக்கிய தக்காளி சேர்த்து அரைக்கவும் .



 பின் கடாயில்  எண்ணெய் விட்டு  கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து , அரைத்த விழுதுகளை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளற வேண்டும் ...










சுவையான தக்காளி தொக்கு  ரெடி ...இது வரை மூன்று முறை செய்து விட்டேன் ... சூப்பரான சுவை ...நன்றி எங்கள் ப்ளாக் சுவையான ரெசிபிகளை பகிர்வதற்கு ...






அன்புடன்
அனுபிரேம்



4 comments:

  1. சுவையான குறிப்பு. செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete
  2. அனு படங்களுடன் தக்காளி தொக்கு அருமை.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    தக்காளி தொக்கு மிக அருமையாக உள்ளது. படங்கள், செய்முறை விளக்கங்கள் அனைத்தும் நன்றாக, விளக்கமாக இருக்கிறது. நானும் இந்த முறையில் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. ஆஆஆவ்வ் சூப்பரா இருக்கு, நானும் செய்து பார்க்க யோசிக்கிறேன்.
    பாரதியார் பாடல் மிக நன்றாக இருக்குது இன்று.

    ReplyDelete