25 October 2020

பூதத்தாழ்வார்

 பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று..


ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...






பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்லதிருக் கடல்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே

எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே

பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே  !







பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்   - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை   - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள்  - 100

சிறப்பு     -  குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.


வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள்.

எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்   பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. 

அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை  செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்  பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.









தனக்கடிமைபட்டது தானறியானேலும் * 
மனத்தடைய வைப்பதாம்மாலை * - வனத்திடரை 
ஏரியாம்வண்ணம் இயற்றுமிதுவல்லால் * 
மாரியார்பெய்கிற்பாற்மற்று? 

16 2197

மற்றாரியலாவர்? வானவர்கோன்மாமலரோன் * 
சுற்றும்வணங்கும்தொழிலானை * - ஒற்றைப் 
பிறையிருந்த செஞ்சடையான்பின்சென்று * மாலைக் 
குறையிரந்து தான்முடித்தான்கொண்டு.

17 2198



கொண்டதுலகம் குறளுருவாய், கோளரியாய் * 
ஒண்திறலோன்மார்வத்துகிர்வைத்தது * - உண்டதுவும் 
தான்கடந்தவேழுலகே தாமரைக்கண்மாலொருநாள் * 
வான்கடந்தான்செய்தவழக்கு. 

18 2199


வழக்கன்றுகண்டாய் வலிசகடஞ்செற்றாய் * 
வழக்கொன்றுநீமதிக்கவேண்டா * - குழக்கன்று 
தீவிளவின்காய்க்கெறிந்த தீமைதிருமாலே! * 
பார்விளங்கச்செய்தாய்பழி.

19 2200


பழிபாவங்கையகற்றிப் பல்காலும்நின்னை * 
வழிவாழ்வார் வாழ்வராம்மாதோ * - வழுவின்றி 
நாரணன்தன்நாமங்கள் நன்குணர்ந்துநன்கேத்தும் * 
காரணங்கள்தாமுடையார்தாம்.

20 2201










தாமுளரே தம்முள்ளமுள்ளுளதே * தாமரையின் 
பூவுளதே ஏத்தும்பொழுதுண்டே * - வாமன் 
திருமருவு தாள்மரூவுசென்னியரே * செவ்வே 
அருநரகஞ்சேர்வதரிது.

21 2202


அரியதெளிதாகும் ஆற்றலால்மாற்றி * 
பெருகமுயல்வாரைப் பெற்றால் * - கரியதோர் 
வெண்கோட்டுமால்யானை வென்றுமுடித்தன்றே * 
தண்கோட்டுமாமலரால்தாழ்ந்து. 

22 2203


தாழ்ந்துவரங்கொண்டு தக்கவகைகளால் * 
வாழ்ந்துகழிவாரை வாழ்விக்கும் * - தாழ்ந்த 
விளங்கனிக்குக் கன்றெறிந்துவேற்றுருவாய் * ஞாலம் 
அளந்தடிக்கீழ்க்கொண்டவவன்.

23 2204


அவன்கண்டாய்நன்னெஞ்சே!ஆரருளும்கேடும் * 
அவன்கண்டாய் ஐம்புலனாய்நின்றான் * - அவன்கண்டாய் 
காற்றுத்தீநீர்வான் கருவரைமண்காரோதச் * 
சீற்றத்தீயாவானும்சென்று.

24 2205



சென்றதிலங்கைமேல் செவ்வேதன்சீற்றத்தால் * 
கொன்றதிராவணனைக்கூறுங்கால் * - நின்றதுவும் 
வேயோங்குதண்சாரல் வேங்கடமே * விண்ணவர்தம் 
வாயோங்குதொல்புகழான்வந்து. 

25 2206














பூதத்தாழ்வார்  திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..



அன்புடன்
அனுபிரேம்...



2 comments:

  1. வணக்கம் சகோதரி

    நல்ல சிறப்பான பதிவு. பூதத்தாழ்வார் பற்றிய விளக்கங்களை பக்தியுடன் படித்து தெரிந்து கொண்டேன். அனைவரும் அவர் பாதம் பற்றி ஸ்ரீ மன் நாராயணனை அன்பை பெறுவோமாக..!
    ஓம் நமோ நாராயணாய நமஃ.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு. நினைவாக இடுகை போட்டிருக்கீங்க.

    படங்கள் மிக அழகு.

    தலசயனப் பெருமாளை எப்போது தரிசனம் செய்ய வாய்ப்பு வருகிறதோ..

    ReplyDelete