26 October 2020

பேயாழ்வார்

 பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...


ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
  பேயாழ்வார் வாழி திருநாமம்!

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே

மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே

மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே

நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே .....!


பிறந்த ஊர் -  மயிலாப்பூர்

பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு

நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)

கிழமை      - வியாழன்

எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி

பாடல்கள் -100

சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)


தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.


திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்

 *வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,

*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற

திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.வந்துதைத்தவெண்திரைகள் செம்பவளவெண்முத்தம் *
அந்திவிளக்குமணிவிளக்காம் * - எந்தை 
ஒருவல்லித்தாமரையாள் ஒன்றியசீர்மார்வன் * 
திருவல்லிக்கேணியான்சென்று. (2) 

16 2297


சென்றநாள்செல்லாத செங்கண்மாலெங்கள்மால் * 
என்றநாளெந்நாளும்நாளாகும் * - என்றும் 
இறவாதவெந்தை இணையடிக்கேயாளாய் * 
மறவாதுவாழ்த்துகவென்வாய். 

17 2298


வாய்மொழிந்துவாமனனாய்மாவலிபால் * மூவடிமண் 
நீயளந்துகொண்டநெடுமாலே? * - தாவியநின் 
எஞ்சாவிணையடிக்கே ஏழ்பிறப்புமாளாகி * 
அஞ்சாதிருக்கவருள். 

18 2299


அருளாதொழியுமே? ஆலிலைமேல் * அன்று 
தெருளாதபிள்ளையாய்ச் சேர்ந்தான் * இருளாத 
சிந்தையராய்ச்சேவடிக்கே செம்மலர்தூய்க்கைதொழுது * 
முந்தையராய் நிற்பார்க்குமுன். 

19 2300


முன்னுலகம் உண்டுமிழ்ந்தாய்க்கு * அவ்வுலகமீரடியால் 
பின்னளந்துகோடல்பெரிதொன்றே? - என்னே! 
திருமாலே! செங்கணெடியானே! * எங்கள் 
பெருமானே! நீயிதனைப்பேசு. 

20 2301
பேசுவார் எவ்வளவுபேசுவர் * அவ்வளவே 
வாசமலர்த்துழாய்மாலையான் * - தேசுடைய 
சக்கரத்தான் சங்கினான்சார்ங்கத்தான் * பொங்கரவ 
வக்கரனைக் கொன்றான் வடிவு. 

21 2302


வடிவார்முடிகோட்டி வானவர்கள் * நாளும் 
கடியார்மலர் தூவிக்காணும் - படியானை * 
செம்மையாலுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே! * 
மெய்ம்மையேகாணவிரும்பு. 

22 2303


விரும்பிவிண்மண்ணளந்த அஞ்சிறையவண்டார் *
சுரும்புதொளையில்சென்றூத * அரும்பும் 
புனந்துழாய்மாலையான் பொன்னங்கழற்கே * 
மனம்துழாய்மாலாய்வரும். 

23 2304


வருங்காலிருநிலனும் மால்விசும்பும்காற்றும் * 
நெருங்குதீநீருருவுமானான் * - பொருந்தும் 
சுடராழி யொன்றுடையான்சூழ்கழலே * நாளும் 
தொடராழிநெஞ்சே! தொழுது. 

24 2305


தொழுதால்பழுதுண்டே? தூநீருலகம் * 
முழுதுண்டுமொய்குழலாளாய்ச்சி * - இழுதுண்ட 
வாயானை மால்விடையேழ்செற்றானை * வானவர்க்கும் 
சேயானை நெஞ்சே! சிறந்து.

25 2306
முந்தைய பதிவுகள் ..

பேயாழ்வார் வைபவம்  போன வருட பதிவு

திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....

பேயாழ்வார்

பேயாழ்வார்- 19பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!


ஓம் நமோ நாராயணா..அன்புடன்

அனுபிரேம்...

2 comments:

 1. பேயாழ்வார் அவதார தலம், மைலாப்பூர்.

  அந்த புஷ்கரணி, வயல் வெளிகளின் நடுவே அமைந்திருந்தது. இப்போது ஒரு கிணறு, சுற்றிவர சிறு இடம், அதைச் சுற்றி பள்ளிவாசலும் அவர்களுக்குரிய இடமுமாக மிகவும் சுருங்கிவிட்டது மிகவும் விநோதம்தான்.

  ReplyDelete
 2. படங்கள் அட்டகாசம் அனு.

  நானும் வலை வரவே இல்லை. இப்பத்தான் எட்டிப் பார்க்கிறேன் அப்பப்பதான் வர முடியும்...

  கீதா

  ReplyDelete