16 December 2025

திருப்பாவை 2

  இரண்டாம் பாசுரம் -  க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள். 




திருப்பாவை 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

       செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

       நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்

       செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

       உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்


இவ்வுலகிலே வாழப்பிறந்தவர்களே! நாமும் உஜ்ஜீவனத்துக்கான வழியை உணர்ந்து நோன்புக்காக மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டிய செயல்களைக் கேளுங்கள்.

 திருப்பாற்கடலில் பள்ளிகொள்கின்ற ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பாடுவோம். 

நெய்யும் பாலும் உண்ணமாட்டோம். 

அதிகாலையில் எழுந்து நீராடுவோம். 

ஆனால் கண்ணுக்கு மையும் தலையில் பூவும் அணிய மாட்டோம். 

நம் பெரியோர்கள் செய்யாதவைகளை நாமும் செய்ய மாட்டோம். மற்றவர்களைப் பற்றிக் கோள் சொல்ல மாட்டோம். தகுந்தவர்களுக்கு தானமும் தேவையுள்ளவர்களுக்கு பிக்ஷையும் அவர்கள் கொள்ளும் அளவுக்குக் கொடுப்போம்.




மார்கழி மாதம் இரண்டாம் நாள் 

ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , 

உற்சவர் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் 











ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்....



அன்புடன்
அனுபிரேம்🌺🌺🌺

No comments:

Post a Comment