பன்னிரண்டாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனான, ஒரு இடையனின் தங்கையான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
![]() |
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய்
இளங்கன்றுகளை உடைய எருமைகளானவை கதறிக்கொண்டு,
தம் கன்றுகளிடம் இரக்கம் கொண்டு, அக்கன்றுகளை நினைத்து தம் முலைகளில் பாலைப் பெருக்க, அதனாலே வீடு முதுவதும் ஈரமாகி சேறாக்கும்படி இருக்கக்கூடிய,
க்ருஷ்ண கைங்கர்யம் என்கிற உயர்ந்த செல்வத்தை உடையவனின் தங்கையே!
எங்கள் தலையிலே பனி பெய்யும்படிக்கு உன்னுடைய வீட்டின் வாசலைப் பிடித்துக்கொண்டு,
அழகியதான இலங்கைக்குத் தலைவனான ராவணனை கோபத்தாலே கொன்றவனாய்,
மனதுக்கு இனிமையைக் கொடுப்பவனான ராமன் எம்பெருமானை நாங்கள் பாடியபோதும் நீ பேசவில்லை.
இனியாவது எழுந்திரு.
இது என்ன ஒரு பெரிய உறக்கம்? திருவாய்ப்பாடியில் உள்ள அனைத்து வீட்டில் இருப்பவரும் உன்னுடைய தூக்கத்தை அறிந்து கொண்டுவிட்டனர்.
மார்கழி மாதம் பனிரெண்டாம் நாள் பரமபத நாதர் சந்நிதியில்






வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. இன்றைய திருப்பாவை பாசுரமும், அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் விடியலில் தன் தோழிகளுக்கு கிருஷ்ண கைங்கரியத்தின் பெருமைகளை உணர்த்தியபடி கோதை நாச்சியார் எழுப்ப அந்த தோழிகள் ன்ன தவம் செய்திருக்க வேண்டும்..! மெய் சிலிர்த்துப் போகிறது.
உற்சவரின் திருக்கோலமும். ஆண்டாள் நாச்சியாரின் அலங்காரமும் கண்டு பணிந்து வேண்டிக் கொண்டேன். உங்கள் குரல் வழி பாசுரமும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.