02 August 2018

வாழி காவேரி..



வாழ்க வளமுடன்..

நடந்தாய் வாழி காவேரி! 
நாடெங்குமே செழிக்க! 
நன்மையெல்லாம் சிறக்க!










குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது.


பின் பல இடங்களை கடந்து....

மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான கர்நாடகாவின் ஆடு தாண்டும்  இடத்திலிருந்து...

  (பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால் , இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர். கன்னட மொழியில் மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர்).


தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது.






 பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. 

இங்கிருந்தே தமிழக காவிரிப் பாசனம் தொடங்குகிறது. 

மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. 

ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது.

 அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. 

கரூர்,திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர்.




 முசிறி, குளித்தலை நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. 

இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது.

 வட கிளை கொள்ளிடம் என்றும் தென் கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. 

வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.

 கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். 

கொள்ளிடம்,காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. 




கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. 

காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை  சேர்ந்தவை.




போன வாரம் கல்லணை செல்லும் வழியில் கணவர் எடுத்த காணொளி






“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை

மெலிக்கும் காவிரிப் பேரியாற்று

(அகம் : 126.4-5)

மலையில் பிறந்து கடலின் கரையினைக் கரைத்திடும் அளவிற்குக் காவிரி விரைந்து செல்லும் நீர்ப்பெருக்கைக் கொண்டது என அதன் வளமையைப் பறைசாற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது


“புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச்

சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்

மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்”

(புறம் : 68-8-10)

குழந்தை பிறந்து பல திங்கள் கடந்த பின்னும் பால் சுரக்கும் தாயைச் சான்றாக்கிக் காவிரி தாயாகவும் அதனால் உலக உயிர்கள் காக்கப்படுவதாகவும் இப்பாடல் கூறுகிறது.

காப்பிய இலக்கியமான சிலப்பதிகாரத்தில் காவிரி பற்றி உயர்வாகப் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

“பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து

குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருகு அசைய நடந்தாய்!

வாழி காவேரி”

(சிலம்பு 7-8)



வாழி காவேரி..

என்றும்

வாழி காவேரி..




தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்தே...




அன்புடன்

அனுபிரேம்



8 comments:

  1. காவிரியில் நீர் வரத்து குறையத் தொடங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தகவல்களும் படங்களும் சிறப்பு.

    ReplyDelete
  3. தகவலும் படமும் அருமை. எத்தனை நாளாச்சுது இப்படி காவிரியை பார்த்து..

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை.
    காணொளி அருமை, காற்றின் ஒலி கேட்க பிடிக்கும் எனக்கு.

    ReplyDelete
  5. காவிரி பற்றிய தகவல்கள்,படங்கள் அருமை.
    ஆடிபெருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மிக அருமையான பகிர்வு. இப்போக் கொஞ்சம் நீர் வரத்துக் கம்மியாகி உள்ளது.

    ReplyDelete