17 April 2019

திருக்குறுங்குடி கருடசேவை

வாழ்க வளமுடன் 


திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருப்பங்குனி ப்ரம்மோத்ஸவம்



போன மாதம் நடைபெற்ற திருக்குறுங்குடி  ஐந்து கருடசேவை படங்கள் இன்றைய தரிசனத்தில் ...











 மலை மேல் நம்பி திருக்கோவில்







சுவாமி  ராமானுஜர் திருவட்டப்பாறை




(1788)

தவள விளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்

துவள என்னெஞ்சகம் சோரஈரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்

இவளும் ஓர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன

குவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக்கேஎன்னை உய்த்திடுமின்.


அன்புடன்
அனுபிரேம் 

5 comments:

  1. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    அனு செம ஃபோட்டோஸ். என் அப்பாவின் ஊர். அப்பா பிறந்த ஊர். நான் பல முறை அங்கு இருந்திருக்கிறேன். மலை நம்பிக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். நடந்தே. அந்தச் சுனை இருக்கு நீங்க ஃபோட்டோ எடுத்துப் போட்டுருக்கீங்கல்ல. அங்கு ஒரு சிறிய அருவி போல இருக்கிறது இல்லையா அது தண்ணீர் நிறைய இருக்கும் போது நிறைய விழும் அதன் பக்கத்தில் இருக்கும் அந்தப் பெரிய பாறை இடுக்கு (ஓட்டை போலத் தெரிகிறது இல்லையா அதிலிருந்து) சுனையிலும் நிறைய நீர் இருக்கும். நான் அதில் நீந்தி அந்த அருவியின் பக்கம் சென்று அப்பாறையில் ஏறி உட்கார்ந்து கோள்வது வழக்கம். பல நினைவுகள். கோயில் அருகில் இருக்கும் படித்துறையில் இறங்கினால் நீர் செம ஸ்படிகமா அடி வரை க்ளியரா தெரியும். அணைக்கட்டுப் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு தண்ணீரில் விளையாடிவிட்டு மேலே ஏறுவோம்...

    மிக்க நன்றி அனு. இது அப்பாவின் ஊர். அம்மா வழிப்பாட்டியின் ஊரும் திருக்குறுங்குடி என்றும் சொல்வர் கீழநத்தம் என்றும் சொல்வர்...ஆனால் இருந்தது திருவண்பரிசாரம். அப்பா வழித்தாத்தாவின் பெற்றோர் திருவனந்தபுரம்...இப்படி எனக்கு வேர்கள் பல இடங்களில் ஹா ஹா ஹா ஹா ஹா

    மிக்க நன்றி அனு எங்கள் ஊர் அதுவும் எனக்கு மிகவும் பிடித்த நம்பி மலை படங்கள் போட்டதற்கு

    கீதா

    ReplyDelete
  3. என் அப்பாவும் திருக்குறுங்குடி சென்று வந்தார் கருட சேர்வை பார்க்க...சென்று விட்டு வந்தார்.

    கீதா

    ReplyDelete
  4. நான் பார்க்க ஆசைப்படுகின்ற விழா. வாய்ப்பு அமையவில்லை. இப்பதிவு மூலம் அந்த குறை ஓரளவு நிறைவேறியது.

    ReplyDelete
  5. திருக்குறுங்குடி என்றவுடன் கீதா தான் நினைவுக்கு வந்தார் அனு. அவர் அந்த ஊரைப்பற்றி சொல்லி கொண்டே இருப்பார். இப் பதிவிலும் நிறைய சொல்லி இருக்கிறார்.
    என் அம்மாவுக்கு திருவனந்த புரம், நான் பிறந்த ஊர் திருவனந்தபுரம் தாத்தாவீட்டில்.என் அப்பாவுக்கு பாளையம்கோட்டை.

    உங்கள் படங்கள் மூலம் ஊரின் அழகு, கோவிலை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.
    கருடசேவை தரிசனம் செய்தேன். நன்றி அனு.

    ReplyDelete