01 November 2019

ஸ்ரீ மணவாள மாமுனிகள்

ஸ்ரீ மணவாள மாமுனிகள்  திருநட்சத்திரம் இன்று  (1/11/2019

ஐப்பசி  திருமூலம்.....






மணவாளமாமுனிகளின் வாழிதிருநாமம்:

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே

எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே

ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே

அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே

எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே

ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே

முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே

மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே






 திருநக்ஷத்ரம்           : ஐப்பசியில் திருமூலம்

அவதார ஸ்தலம்    : ஆழவார்திருநகரி

ஆசார்யன்                 : திருவாய்மொழிப் பிள்ளை

பரமபதித்த இடம் : திருவரங்கம்

காலம்                           : கிபி 1370 - 1443


பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க,

ஓராண் வழி ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில்    இறுதி

ஆசார்யனாக எழுந்தருளி இருந்து

குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார்

சுவாமி அழகிய மணவாள மாமுனிகள் ....





நம்மாழ்வாருக்கு,மதுரகவியாழ்வார் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடியது போல்,மாமுனிகளுக்கு அவருடைய அத்யந்த சீடர் கோவில் கந்தாடை அண்ணன் 'மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு' பாடியுள்ளார்.

ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.




மாமுனிகளின் ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளை, அவரிடம் திருவாய்மொழியைத் தெளிவாக,எல்லா அர்த்தங்களும் விளங்குமாறு காலட்சேபம் செய்து வருமாறு நியமித்தார்.

ஸ்ரீபாஷ்யத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு முறை கற்று, ஒரு முறை காலட்சேபம் செய்யுமாறும் மற்று எப்போதும், திருவாய் மொழியை வளர்ப்பதிலும்/பரப்புவதிலுமே கவனம் செலுத்துமாறும் பணித்தார்.

அவ்வாறே மாமுனிகள் திருவாய்மொழியை பூர்வாசார்யர்கள் அனைவரது வ்யாக்யானங்களோடு,தமக்கே உரித்தான சிறந்த வாக்கின்பத்தோடு,காலட்சேபம் செய்து வந்தார்.

அவருடைய காலட்சேபம் கேட்பதற்காகவே பல பெரிய வித்வான்கள் அவருடைய சீடர்களாக மாறினர்.

ஸ்ரீரங்கதாதப் பெருமாளே மாமுனிகளிடம் திருவாய்மொழி ஈடு (நம்பிள்ளையின் முப்பத்தா றாயிரப்படி) காலட்சேபம் கேட்க விழைந்து, ஓராண்டு காலம் தம் உற்சவங்கள்/புறப்பாடு எல்லாம் நிறுத்தி விட்டு மாமுனிகளிடம் ஈடு காலட்சேபம் கேட்டார். 

காலட்சேபத்தின் இறுதிநாளான ஆனி மூலத்தன்று,நம்பெருமாள்
மாமுனிகளுக்குக் குரு தட்சிணையாகச் சமர்ப்பித்த தனியன் தான்,மிகப் பிரசித்தி பெற்ற,

"ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்,
யதீந்த்ர ப்ரவணம்,வந்தே
ரம்ய ஜாமாதரம் முநிம்"  ஆகும்.

திருவாய்மொழியின் ஒவ்வொரு பத்துப் பாசுரங்களின் சாரமாக, "திருவாய்மொழி நூற்றந்தாதி" பாடினார்.

மாமுனிகள் திருவாய்மொழி வ்யாக்யானம் செய்த பாண்மை கொண்டு அவருக்கு "ஈட்டுப் பெருக்கர்" என்னும் பட்டம் ஏற்பட்டது.

மாமுனிகள் திருவாய்மொழி காலட்சேபம் செய்யாமல் இருந்தால்,அதன் மேன்மை யாருக்கும் விளங்காமல் ஆழ்வார் பாசுரங்களே ஒருவேளை கடலோசை போன்று இருந்திருக்கும் என்று சொன்னார்கள் பூர்வர்கள்.




மற்றெல்லா திவ்ய தேசங்களிலும்,மாமுனிகள் உற்சவத்தின் போது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில், வேறு,வேறு வாகனங்களில் புறப்பாடு கண்டருள்கிறார்.

 ஆனால் அவர் பல்லாண்டுகள் நித்யவாசம்செய்து,ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்த ஸ்ரீரங்கத்தில் அவர்  புறப்பாடு கண்டருள்வதில்லை.

ஸ்ரீரங்கத்திலேயே மற்ற ஆழ்வார், ஆசார்யர்கள் அவர்களது திருநட்சித்திர ங்களில் திருவீதிகளில் புறப்பாடு கண்டருள்கிறார்கள்.

மாமுனிகள்,நம்பெருமாளும், ஆழ்வார்களும், எம்பெருமானாரும் புறப்பாடு கண்ட திருவீதிகளில், தமக்குப் புறப்பாடு எதுவும் நடத்தக் கூடாது என்று கூறிவிட்டார்.

அதனாலே ஸ்ரீரங்கத்தில் மாமுனிகள் புறப்பாடு(வீதி ஊர்வலம்) கண்டருள்வதில்லை.












ஆச்சாரியார் திருவடிகளே சரணம்....


அன்புடன்

அனுபிரேம்....

4 comments:

  1. மணவாள மாமுனிகளைப் பற்றிப் படித்துள்ளேன். இன்று கூடுதல் செய்திகள் மற்றும் புகைப்படங்களுடன் சிறப்பான பதிவினைக் கண்டேன்.

    ReplyDelete
  2. மணவாள மாமுனிகள் விரிவாக அறிந்துகொண்டோம்.

    ReplyDelete
  3. மணவாள மாமுனிகளைப் பற்றி விரிவான அருமையான பகிர்வு அனு.
    படங்களும் அழகு.

    ReplyDelete