வாழ்க வளமுடன் ...
மான்கள் பற்றிய சுவையான தகவல்கள்...
மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடீ என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள்.
மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும்.
மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன.
கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.
மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும்.
கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குட்டிக்கு மான்மறி என்று பெயர்.
புலிகள் பற்றிய சுவையான தகவல்கள்...
புலி (பாந்தெரா தீகிரிஸ்), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்தெரா வகை பூனையினங்களில் இதுவே மிகப் பெரியதாகும். புலி உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும்.
பசி இல்லாதபோது மிருகங்களைக் கொல்வதில்லை சிங்கம்.
அதனால் சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறுவார்கள்.
இருந்தாலும் கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்லப்படுகிறது.
புலியின் நெற்றியில் 王 என்ற அடையாளம் இருக்கும். இது சீன எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும்.
வரலாற்றில் புலிக்கும், சிங்கத்திற்கும் இடையிலான சண்டைகளில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது.
புலியின் சிறப்பு கருதி இந்திய அரசு தேசிய விலங்காக புலியை அறிவித்து கொண்டாடி வருகிறது.
புலி தனித்தே தமது இரையை வேட்டையாடும். ஆனால் சிங்கங்கள், பல சமயங்களில் குழுவாகத்தான் வேட்டையாடும்...
இந்தியாவில் 49 புலிகள் காப்பகங்கள் இருக்கிறது.
ஆந்திராவில் இருக்கிற நாகர்ஜுனாசாகர்- ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்தான் இருப்பதிலேயே மிகப் பெரியது. சுமார் மூன்றாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் அதிகமாகும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள 'களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்' தான் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயம் ஆகும். 1988 ம் ஆண்டு இந்தச் சரணாலயம் ஏற்படுத்தப் பட்டது.
புலிகள் தமது வாழிட எல்லையை வரையறுத்துக் கொண்டு வாழும் தன்மையுடையவை.
(Territory marking) மரங்களில் தமது நகக் கீறல்கள் மற்றும் தனித்தன்மையான வாசனையுடைய சிறுநீரை எல்லைகளில் உள்ள மரங்களில் பீச்சியடித்து, எல்லையை நிர்ணயிக்கும்.
ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு விதமான வாசனையைக் கொண்டிருக்கும்.
காடுகளில் நன்கு அனுபவமுள்ளவர்களால் இந்த வாசனையைக் கொண்டு எளிதாக அவற்றின் இருப்பிடம் அல்லது நடமாட்டம் உள்ள இடங்களைச் சுலபமாக அறிந்து கொள்வார்கள்.
புலிகளின் வாசனையை நன்கு உணர்ந்தவை மான்களும், குரங்குகளும் ஆகும். புலியின் வருகையை அறிந்து இவை இரண்டும் வழக்கத்திற்கு மாறான வினோதமான எச்சரிக்கைக் குரலை (alarm call) எழுப்பும்.
இதில் மிளாவின்-sambar (Rusa unicolor) குரலும், புள்ளிமான்களின்-Spotted deer/cheetal (Axis axis) குரலும் வேறுபாடுடையவை. பெரும்பாலும், காட்டில் எழும் முதல் குரல், அனேகமாக மயிலின் குரலாகத்தான் இருக்கும். அதனைத் தொடர்ந்துதான் மற்றவற்றின் குரல்கள் ஒலிக்கும்.
புலிகள் வேட்டையாடும் இரையை முடிந்தவரை பாதுகாப்பான பகுதிக்கு இழுத்துச் சென்றே உண்ணும். சில சமயம் கிலோமீட்டர் கணக்கில்கூட இழுத்துச் செல்லும்.
தொடரும் ..
சிறப்பான சுற்றுலா. படங்களும் தகவல்களும் நன்று.
ReplyDeleteமானும் புலியும்னதும், சிறுகுழந்தைகளுக்கான கதை என்று நினைத்தேன். ஆஹா காணொளிகள்! இரண்டுமே மிகவும் ரசித்தேன். புலி கொட்டாவி விட்டு தூங்குறார் ரொம்ப களைப்பு போலும் வயதான கிழவர் போல~!!!
ReplyDeleteகீதா