10 March 2022

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , வண்டலூர்

வாழ்க வளமுடன் ..


போன வருட சென்னை பயணத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா  செல்லும் வாய்ப்பு கிடைத்தது ...அங்கு எடுத்த படங்களும் , காணொளிகளும், சில தகவல்களுடன் இனி காணலாம் ...




 அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , வண்டலூர்.... 

சென்னையின் தெற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா 'வண்டலூர் பூங்கா' என்றும் அழைக்கப்படுகிறது. 

இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட, 'இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா'வாகும்.

 இங்கு 170க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.


























இந்தியாவில் உள்ள நவீன முறையில் அறிவியல் அடிப்படையில் பராமரிக்கப்படும் மிகச் சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக சிறந்து விளங்குகிறது.









நாங்கள் சென்றது கடந்த டிசம்பர் மாதம், ஒரு  வெள்ளிக்கிழமை என்றதால் மிதமான மக்கள் வந்து இருந்தனர் ...கூட்டம் இருந்தாலும் பொறுமையாக காண முடிந்தது ...பரந்து  விரிந்த இடம் ..பசுமை போர்த்திக் கொண்டு இனிமையாக இருந்தது ..

தொடரும் ..


அன்புடன் 
அனுபிரேம்  💞💞 





10 comments:

  1. ஓ இப்ப 2021 டிசம்பரா...

    பூங்காவில் நிறைய புதியதாய் இருக்கிறது போல அந்த செயற்கை அருவி, எல்லாம்.

    அந்த ஒற்றைக் குரங்கு முட்டியில் கை வைத்து அமர்ந்திருப்பதைப் பார்க்கறப்ப
    "இன்னாமா பாத்துக்கினு நிக்கிற....என்னப் பாக்க வந்தியாக்கும்....ந்தா இந்தாண்ட குந்து..ஊர்ல என்னா நியூசு...துன்ன என்னாருக்கு?" அந்தப் போஸ் அப்படியான ஒரு தோற்றம் ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இது முதல் முறை அக்கா ...இந்த இடங்கள் எல்லாம் நல்ல பராமரிப்பில் உள்ளன

      உங்க கமெண்ட் சூப்பர் ...

      Delete
  2. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பற்றிய தகவல்கள் சிறப்பு. காணொளியும் கண்டேன். படங்களும் காணொளியும் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    ஒரே ஒரு முறை பல வருடங்களுக்கு முன் இந்த உயிரியல் பூங்காவிற்குச் சென்றதுண்டு, குடும்பத்தோடு.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. பதிவையும் பார்த்து , காணொளியையும் கண்டு ரசித்தமைக்கு நன்றிகள் அண்ணா ..

      Delete
  3. 2005ல் சென்றதை நினைவுபடுத்துகிறது. அடுத்த பகுதியில் புலி, காட்டெருமை சிங்கம் போன்றவற்றைக் காணலாம்னு நினைக்கிறேன். கல் மரம் அப்போது பார்க்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பகுதியில் பறவைகள் ....

      Delete
  4. படங்கள் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  5. படங்களும் தகவல்களும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. படங்கள் நன்று. நானும் இங்கு சென்றிருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்.

    ReplyDelete