திருவல்லிக்கேணி தெப்போத்ஸவம் - 2ம் திருநாள் - ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி ..
முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...
பெரிய திருமொழி - இரண்டாம்பத்து
மூன்றாம் திருமொழி – வில் பெரு விழவும்
1072
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன், நல் புவி தனக்கு இறைவன் *
தன் துணைஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை * பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை * எந்தை தந்தை தம்மானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே.
1073
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று *
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம் பெருமான்! அருள்! என்ன *
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி, நூலிழப்ப *
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
அனுபிரேம்
கோயிலுக்குச் சென்றுள்ளேன். விழாவில் கலந்துகொண்டதில்லை. இப்பதிவு மூலமாகக் கலந்துகொண்ட உணர்வு. நன்றி.
ReplyDeleteஅழகான தரிசனம் எனக்கும் கிடைத்தது.
ReplyDeleteநல்லதொரு தரிசனம் கண்டேன். நன்றி.
ReplyDelete