18 March 2022

மேல்கோட்டை யதிராஜ சம்பத்குமாரர் கிருஷ்ண முடி உற்சவம்...

வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு .. மேல்கோட்டை யதிராஜ சம்பத்குமாரர் வைரமுடி உற்சவம்...

இன்று மேல்கோட்டை யதிராஜ சம்பத்குமாரர் கிருஷ்ண முடி தரிசனம் .....








மேல்கோட்டை இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில்
பாண்டவபுரா தாலுக்காவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

பன்னிரண்டாம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் வைணவ மகாசாரியர் ஸ்ரீ இராமானுசர் இங்கு பன்னிரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். 
அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம் செய்து “திருநாராயணபுரம்” என அழைக்கும்படி அருளினார்.


ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,
குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது.

அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள்.

அச்சமயம் தொலைந்ததாக சொல்லப்பட்ட இக்கோவிலின் உற்சவமூர்த்தி,டெல்லியை ஆண்டு வந்த முகலாய அரசரின் அரண்மனையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்க்க,
பெருமாளை அந்த அரசரின் மகள் வைத்து விளையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

ராமனுஜர் அந்தப்பெண்ணிடம் பெருமாளை தரும்படி கேட்க அவள் கொடுக்க மறுத்து விட்டாள்.

உடனே ராமனுஜர் பெருமாளை பார்த்து “ செல்லப்பிள்ளை வா” என்று அழைக்க பெருமாளும்,
“சல்! சல்!” என கொலுசு ஒசை படுத்த நடந்து ராமானுஜரிடம் வந்தார்.

பெருமாளை பிரிந்து இருக்க முடியாத அந்தப் பெண்ணும் அவருடனே மேலக் கோட்டைக்கு வந்து விட்டார்,   பின்னர் அதன் துலுக்க நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.
 
இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவமூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த கோவிந்தனின் இந்த செய்கை “யதிராஜ சம்பத்குமார வைபவம்’ என்ற பெயரில் உற்சவமாக உடையவரின் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூரில் இன்றைக்கும் கொண்டாடப் படுகின்றது.

செல்லப்பிள்ளை, சம்பத்குமார், ராமப்பிரியர் என்று பெயர்கள் கொண்டு வாத்சல்யத்துடன் அழைக்கப்படும் இந்த விக்ரகத்தின் திருமேனி.




































இத்தகைய தெளிவான படங்களை முக நூலில்  பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  மிகவும் நன்றி.

நான்முகன் திருவந்தாதி 

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் * 
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே * - வேறு  ஒருவர்  
இல்லாமை நின்றானை, எம்மானை * எப்பொருட்கும் 
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.

4 2385


தொகுத்த வரத்தனாய்த், தோலாதான் மார்வம் * 
வகிர்த்த வளை உகிர், தோள் மாலே! * - உகத்தில் 
ஒருநான்று நீ உயர்த்தி உள்வாங்கி, நீயே * 
அரு நான்கு ஆனாய்  அறி.

5 2386



அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் * 
சிறியார் சிவப்பட்டார், செப்பில் * -வெறியாய 
மாயவனை, மாலவனை, மாதவனை ஏத்தாதார் 
ஈனவரே ஆதலால் இன்று.

6 2387

ஸ்ரீ யதுகிரி தாயார் சமேத ஸ்ரீ திருநாராயண பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

அன்புடன்
அனுபிரேம்
        

1 comment:

  1. தகவல்களும் படங்களும் சிறப்பு. தொடரட்டும் தங்கள் பதிவுகள்.

    ReplyDelete