22 March 2022

உலக தண்ணீர் தினம்....

வாழ்க வளமுடன் ...

உலக தண்ணீர் தினம்  இன்று .... ஆகவே சில வரிகளும்   சில காட்சிகளும்  .....







மூதுரை - அவ்வையார்


நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை. 10



நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழை பொழியும். மழை போன்ற கொடை வழங்கப்படும். இறையருளால் வழங்கப்படும். 

அந்த மழை நல்லவர் அல்லாதவருக்கும் பயன்படும். 

எப்படி? உழவன் நெல்லம்பயிருக்கு நீர் இறைக்கிறான். அந்த நீர் வாய்க்காலின் வழியே ஓடுகிறது. வாய்க்கால் கரையில் உள்ள புல்லுக்கும் அந்த நீர் உதவுகிறது. அதுபோல இறையாற்றல் நல்லவருக்கு வழங்கும் கொடை அல்லாதவருக்கும் பயன்படும். 

இதுதான் உலக இயற்கை. தீயவர் நலம் பெறுவது இதனால்தான்.














திருக்குறள் - வான் சிறப்பு


கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.



விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.












நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20


எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.















ஒவ்வொரு துளி நீரும் 

விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள் 

என்று உணர்ந்து செயல்படுவோம்...


துளி நீரையும் 

சேமித்து - இவ்வுலகுக்கு 

நன்மை செய்வோம் ...






அன்புடன் 
அனுபிரேம் 





3 comments:

  1. விளக்கம் அருமை சகோ

    ReplyDelete
  2. காணொளிகளும் படங்களும் அழகு. அனு ரெய்னி ட்ராப்ஸ் என்பதுக்கு பொருத்தமா இலையில் தண்ணீர்த் துளிகள் படம் செம. அது போல தென்னைமரம் தண்ணீரில் தெரிவது அழகு

    அந்தப் பறவை ரெட் வாட்டில்ட் லாப்விங்க். ஆட்காட்டி பறவை. எங்கள் பகுதி ஏரிக்கும் விசிட் கொடுத்தது. பல பறவைகள் படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன் பெயர் விளக்கங்களுடம் பதிவு தொகுக்க வேண்டும். நேரம் ரொம்ப சிரமமாக இருக்கிறது.

    இன்று தண்ணீர் தினமா...நம்ம ஊர் ஏரிகளை சுத்தம் பண்ணினா நல்லது. கொஞ்சம் செய்கிறார்கள் தான்..நம்ம ஊர் நா பங்களூர் மட்டும் சொல்லவில்லை. நாடு முழுவதுமான நீர் நிலைகளை அசுத்தம் செய்யாமல்..

    கீதா

    ReplyDelete
  3. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்களும் தகவல்களும் சிறப்பு.

    ReplyDelete