30 March 2022

3.பறவைகள் பலவிதம் ...

 வாழ்க வளமுடன் ...

முந்தைய பதிவுகள் ..

1.வண்டலூர் பூங்கா 

2.வண்டலூர் பூங்கா வரலாறு  ....










இந்த உலகில் சிறகுகள் உள்ள உயிரினங்கள், பறவைகள் மட்டுமே. 

அவற்றின் சிறகுகள் மனிதர்களின் முடி மற்றும் நகங்களில் உள்ள கெராட்டின் பொருளால் ஆனது. மனிதர்களின் புஜங்களில் உள்ள அதே எலும்புகளின் அமைப்பில்தான் பறவைகளின் இறகுகளும் உள்ளன. ஆனால், அதன் அமைப்புதான் வித்தியாசமானது. 

பறவையின் எலும்புக்கூட்டில் உள்ள சில எலும்புகள் உள்ளீடற்றவை. அதனாலேயே பறவைகளால் காற்றில் பறக்கமுடிகிறது. உலகில் 9 ஆயிரத்து 800 வகை பறவை இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.



















ஒசனிச்சிட்டு

உலகில் உள்ள பறவை இனங்களிலேயே சிறிய பறவையினம் ஒசனிச்சிட்டு. 

இது தேன்சிட்டைப் போலவே அந்தரத்தில் இறக்கையை அடித்துக்கொண்டே ஒரு செடியில் உள்ள பூவிலிருந்து தேனைக் குடிக்கும். தென் அமெரிக்க நாடுகளில் வாழும் இப்பறவை 5 சென்டிமீட்டர் நீளமே கொண்டது. எடை 1.8 கிராம் மட்டுமே இருக்கும். 

இரண்டேகால் அங்குலம் உள்ள ஒசனிச்சிட்டு 9 அடி உயரமுள்ள தீக்கோழி வரை பல்வேறு பறவையினங்கள் இந்த பூமியில் காணப்படுகின்றன.










நெருப்புக்கோழி

உலகிலேயே மிகப்பெரிய பறவை நெருப்புக்கோழி. இவை எட்டு அடி வரை வளரக்கூடியவை. பறக்க முடியாதவை. நெருப்புக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. ஆப்பிரிக்க பாலைவனங்களிலும், சவானா புல்வெளிகளிலும் காணப்படுகின்றன. நெருப்புக்கோழி இடும் முட்டைகள் அளவில் பெரிய முட்டைகளாகும். பகலில் பெண் பறவையும், இரவில் ஆண்பறவையும் முட்டைகளை அடைகாக்கும்.

























தொடரும் ..



அன்புடன் 
அனுபிரேம்  💞💞 








3 comments:

  1. பறவைகள் குறித்த தகவல்கள் மற்றும் படங்கள் சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அழகான படங்கள். முதலில் இருப்பது ஹெரான் க்ரே ஹெரான் சாம்பல் நிற நாரை. சிறியது ஓசனிச் சிட்டா? தேன் சிட்டு இல்லையோ? சன்பேர்ட்?

    கறுப்பு அன்னமா அது!!

    நானும் இங்கு ஏரிக்ளில் பறவைகள் எடுத்துள்ளேன்

    கீதா

    ReplyDelete
  3. வண்டலூர் ஜூ பறவைகள் படங்கள் நன்றாக இருக்கின்ற்ன

    துளசிதரன்

    ReplyDelete